சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நேற்று முன்தினம் மது போதையில் வந்த பிளஸ் டூ மாணவர்களை அருள்குமரன், குருமூர்த்தி) கண்டித்த ஆசிரியர் சண்முகசுந்தரம் மீது மாணவர்கள் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களால் கொலை தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதே பள்ளியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மாணவர்கள் இருவர் ஆசிரியரை அரிவாளால் தாக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதனால் பள்ளியில் தங்களுக்குரிய பணி பாதுகாப்பு இல்லை எனவும், மாணவர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பள்ளி வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் நேற்று பணியை புறக்கணித்து பள்ளி வளாகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பள்ளியில் காவல்துறை சார்பாக பாதுகாப்பு வழங்கப்படுமென திருத்தங்கல் காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் உறுதி யளித்ததன் அடிப்படையில் இன்று முதல் பள்ளி வளாகத்தில் காவல்துறை சார்பாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் ஒரு தலைமை காவலர் என காலை முதல் மாலை வரை இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பள்ளி வளாகத்தில் விரும்பத்தகாத செயல்களைத் தடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அவசரபட்டீங்களே ஆதவ்... வீட்டைச் சுற்றி ரவுண்ட் அடித்த திமுக கொடி கட்டிய கார்... விலகியது மர்மம்...!
இதையும் படிங்க: சிக்கலில் திமுக.. வலுக்கும் கண்டனம்..! திருச்சி சிவாவின் உருவ பொம்மை எரித்து போராட்டம்..!