மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியைச் சேர்ந்த காசிப்பாண்டி என்பவர் தனது காரில் தனியார் பள்ளியில் பயிலும் தனது குழந்தைகள் மற்றும் அருகே உள்ள கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளை பள்ளியிலிருந்து ஏற்றி இறக்கி வருவதாக கூறப்படுகிறது.
அவ்வாறு வழக்கம் போல இன்று பள்ளி முடிந்ததும், பள்ளி மாணவ மாணவிகளை கட்டக்கருப்பன்பட்டியில் இறக்கிவிட்டு 6 மாணவ மாணவிகளுடன் பொட்டுலுப்பட்டி திரும்பிக் கொண்டிருந்த போது போலிபட்டி அருகில் மதுரை போடி இரயில்வே பாலத்தின் அடியில் வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
காரில் இருந்து கரும் புகை வெளியேறியதுடன் கண் இமைக்கும் நேரத்திலேயே கார் பற்றி எரிந்து தீ பிளம்பாக காட்சியளித்தது.தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ஜீவா தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இதையும் படிங்க: கார் - பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; தூக்கிவீசப்பட்ட 3 பேர் துடிதுடித்து பலி...!
அதற்குள் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக மாறியது, காரில் தீ பற்றியவுடன் காரில் இருந்த மாணவ மாணவிகள் இறங்கி ஓடியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
இதையும் படிங்க: நேரில் ஆஜரான அன்புமணி... காணொலியில் ராமதாஸ் - நீதிபதி முன்பு நடந்தது என்ன?