சென்னை: தமிழ்நாட்டில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் 35 அமைச்சர்கள் கொண்ட விரிவான அமைச்சரவை உருவாகியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய த.வெ.க. தனிப்பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10-ம் தேதி முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை 23 அமைச்சர்களும், வெள்ளிக்கிழமை 2 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
மொத்தம் 35 அமைச்சர்கள் கொண்ட இந்த அமைச்சரவையில் த.வெ.க.விலிருந்து 31 பேரும், காங்கிரஸிலிருந்து 2 பேரும், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளிலிருந்து தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!
59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். ராஜேஷ்குமார் மற்றும் பெ. விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் அனைவரும் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துகொண்டனர்.

35 அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்:
- சி. ஜோசப் விஜய் (பெரம்பூர்) - முதலமைச்சர்
துறைகள்: பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், உள்துறை, காவல், சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன். - என். ஆனந்த் (தி.நகர்) - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை
- கே.ஏ. செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம்) - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
- ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்) - பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
- கே.ஜி. அருண்ராஜ் (திருச்செங்கோடு) - மக்கள் நல்வாழ்வுத் துறை
- பி. வெங்கடரமணன் (மயிலாப்பூர்) - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
- ஆர். நிர்மல் குமார் (திருப்பரங்குன்றம்) - எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டம்
- ராஜ்மோகன் (எழும்பூர்) - பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரம்
- டி.கே. பிரபு (காரைக்குடி) - இயற்கை வளங்கள்
- எஸ். கீர்த்தனா (சிவகாசி) - தொழில்துறை
- ஸ்ரீநாத் (தூத்துக்குடி) - மீன்வளத் துறை
- கமலி. எஸ் (அவிநாசி) - கால்நடை வளர்ச்சித் துறை
- சி. விஜயலட்சுமி (குமாரபாளையம்) - பால்வளத் துறை
- ஆர்.வி. ரஞ்சித் குமார் (காஞ்சிபுரம்) - வனத்துறை
- வினோத் (கும்பகோணம்) - வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை
- ராஜீவ் (திருவாடானை) - சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம்
- பி. ராஜ்குமார் (கடலூர்) - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை
- வி. காந்திராஜ் (அரக்கோணம்) - கூட்டுறவுத் துறை
- மதன் ராஜா. பி (ஓட்டப்பிடாரம்) - சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை
- ஜெகதீஸ்வரி. கே (ராஜபாளையம்) - சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை
- ராஜேஷ் குமார். எஸ் (கிள்ளியூர்) - சுற்றுலாத் துறை
- எம். விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு) - கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை
- லோகேஷ் தமிழ்செல்வன். டி (ராசிபுரம்) - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
- விஜய் தமிழன் பார்த்திபன். ஏ (சேலம் தெற்கு) - போக்குவரத்துத் துறை
- ரமேஷ் (ஸ்ரீரங்கம்) - இந்து சமய அறநிலையத் துறை
- பி. விஸ்வநாதன் (மேலூர்) - உயர்கல்வித் துறை
- குமார். ஆர் (வேளச்சேரி) - செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைத் துறை
- தென்னரசு. கே (ஸ்ரீபெரும்புதூர்) - அயலக வாழ் தமிழர்கள் நலத் துறை
- வி. சம்பத் குமார் (கோயம்புத்தூர் வடக்கு) - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
- முகமது ஃபர்வாஸ். ஜெ (அறந்தாங்கி) - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
- டி. சரத்குமார் (தாம்பரம்) - மனிதவள மேம்பாட்டுத் துறை
- என். மரிய வில்சன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) - நிதி, திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை
- விக்னேஷ் கே (கிணத்துக்கடவு) - மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை
- வன்னி அரசு (திண்டிவனம்) - ஆதிதிராவிடர் நலத் துறை
- ஷாஜகான் (பாபநாசம்) - சிறுபான்மையினர் நலத் துறை
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம், த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. புதிய கூட்டணி அரசு தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. அமைச்சரவை முழுமையாக அமைக்கப்பட்டதால், தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 60 ஆண்டுகள் கழித்து கிடைத்த அமைச்சர் பதவி! கோஷ்டி பூசலால் வரவேற்கக் கூட வராத காங்., தலைவர்கள்!