காவிரியின் குறுக்கே மேகதாதுஅணை கட்டுவோம் என்பது கர்நாடகாவில் உள்ள ஆளும் அரசினுடைய நிலைப்பாடு. இந்த திட்டத்தை எதிர்த்துதான் தமிழக அரசு தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்திருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேகதாது அணை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கும், மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்தது. மேலும் மேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்து விட்டால் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எதிராக தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது.
அந்த மனுக்களையும் உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் தான் மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும் என்று அந்த மாநில அரசு அமைச்சர்கள் அறிவித்து வருகிறார்கள். இதை எதிர்த்துதான் கடந்த 25ஆம் தேதி முதல்வர் விஜய் சட்ட வல்லுனருடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்ற முதல்வர் விஜய் மூத்த வழக்கறிஞர் உமாபதி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் ‘வாத்தி’ ரெய்டு விட்ட தவெக அமைச்சர்... உடனே பறந்த கடும் எச்சரிக்கை...!
இதன் அடிப்படையில் தற்போது வந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில கர்நாடகாவினுடைய மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடக அரசு மனுத்தாக்கல் செய்திருக்கிறது.உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்டுமானத்திற்கான பூமி பூஜை உள்ளிட்டவை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் விதிகளை மீறும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மேகதாது அணைக்கான திட்டத்துக்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் என்றும், இதனால வனவிலங்குகள், பறவைகள் உள்ளிட்டை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் இவற்றை பாதுகாப்பது தமிழக அரசினுடைய கடமை என்றும் மனுவில் தெரிவித்திருக்கிறது. இந்த காரணங்களால் கர்நாடக அரசினுடைய மேகதாது அணை திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்த முதலமைச்சர் இவரா?... கர்நாடகா அரசியலில் புதிய திருப்பம்... இன்று காங்கிரஸ் எடுக்கப்போகும் முக்கிய முடிவு...!