எண்ணூர் கழிமுகம் தமிழ்நாட்டின் வடக்கு சென்னைப் பகுதியில் அமைந்துள்ள முக்கியமான ஈரநில அமைப்பாகும். கொசத்தலையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் புலிகேட் ஏரி ஆகியவற்றுடன் இணைந்த இந்த கழிமுகம், பல்லுயிர் பெருக்கத்திற்கும் உள்ளூர் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கும் நீண்டகாலமாக அடிப்படையாக இருந்து வருகிறது.
ஆனால் கடந்த பல பத்தாண்டுகளாக தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள் மற்றும் துறைமுக விரிவாக்கங்கள் காரணமாக இப்பகுதி கடுமையான சுற்றுச்சூழல் சீரழிவை சந்தித்து வருகிறது. நிலக்கரி சாம்பல் குவிப்பு, சூடான நீர்க் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலப்பு ஆகியவை நீர்நிலையின் தரத்தை மோசமாக்கி, மீன்வளத்தை அழித்து, மக்களின் உடல்நலத்தையும் பாதித்துள்ளன.இந்த நிலையில் எண்ணூர் கழிமுகம் தொடர்பான பிரச்சினைகளை தமிழ்நாடு சட்டப்பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சட்டப்பேரவை விதிகளின்படி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை அரசின் உடனடி கவனத்திற்கு கொண்டு வர இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. இத்தீர்மானம் மூலம் உறுப்பினர்கள் கழிமுகத்தின் தற்போதைய நிலை, மீனவர்களின் வாழ்வாதார இழப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தரவுகளின் செயல்பாடு மற்றும் மீட்டெடுப்புத் திட்டங்களின் முன்னேற்றம் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு
இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதப்பதாக தெரிவித்திருந்தார். அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜீவ், மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக ஆய்வு செய்து உண்மை கண்டறிவதற்கு நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். முகத்துவார பகுதியில் எந்த இரசாயனமும் இல்லை என்றும் கழிவுநீர் கலப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
ரசாயனம் கலக்கவில்லை என அமைச்சர் சொல்கிறார் என்றும் ஆனால் ரசாயனம் கலந்தால்தான் நீர் தரம் மாறும் என்றும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பாமக எம்எல்ஏ பேசி இருந்தார். நீர்நிலைகளில் கழிவு கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதை அப்புறப்படுத்தும் பணியில் ஆலையை ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!