தேனி அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, அவரது உடலுடன் மூன்று நாட்கள் கொலையாளி தங்கியிருந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம், தேனி நகருக்கு அருகாமையில் உள்ள பழனிசெட்டிபட்டி ஒரு பேரூராட்சியாகும். இப்பகுதி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பழனிசெட்டிபட்டியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். லட்சுமி நகருக்குச் செல்லும் வழியில் வாடகைக்கு தங்கியிருந்த புரோட்டா மாஸ்டரான 38 வயதுடைய அப்துல் ரகுமான் என்பவர், 38 வயதுடைய அம்சவல்லி என்ற பெண்ணைக் கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: தேனியில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்..!! லாடம் கட்டிய போலீஸ்..! தீவிர விசாரணை.!
அவரது உடலை மறைப்பதற்காக சாக்குப் பையில் போட்டு கட்டி வீட்டிற்குள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், உடலை வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் மூன்று நாட்களாக அந்தச் சடலத்துடனேயே அவர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
பெண் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. வீட்டின் கதவைத் தட்டியபோது யாரும் கதவைத் திறக்கவில்லை.
இதையடுத்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றபோது, கொலையாளி அப்துல் ரகுமான் கதவைத் திறந்துள்ளார். வீட்டிற்குள் சென்ற போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை வேறு இடத்திற்கு கொண்டு சென்று மறைப்பதற்காக சாக்குப் பையில் போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனிசெட்டிபட்டி முக்கியமான குடியிருப்புப் பகுதியாகும். இங்கிருந்து லட்சுமி நகர், ஆஞ்சநேய நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதியில் இதுபோன்ற கொலைச் சம்பவம் நடைபெற்றிருப்பது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பயத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமண மண்டபம் உரிமையாளர் கொலையில் திடுக் திருப்பம்... வெளியானது ஷாக்கிங் காரணம்...!