கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணை என்பது தென்காசி மாவட்ட போலீசார் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தில் ஏப்ரல் 7 அன்று நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் பரபரப்பையும், போராட்டங்களையும் ஏற்படுத்தியது. அப்பகுதியைச் சேர்ந்த விவசாயியும் பனைத் தொழிலாளியுமான மணிகண்டன் என்ற நபர் தனது சொந்தத் தோட்டத்தில் உள்ள பனை மரத்தில் அனுமதியின்றி கள் இறக்கியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இந்தச் சம்பவம் போலீசாருக்கும் மணிகண்டனுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி, இறுதியில் துப்பாக்கிச் சூடு வரை நீண்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தென்காசி மாவட்ட போலீஸ் இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையக்கூடாது..!! தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு..!! காரணம் என்ன..??
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அப்போது வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தென்காசி மாவட்ட போலீசார் விசாரிக்க கூடாது என்று உத்தரவிட்டது. சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு நிலுவையில் உள்ளவரை துப்பாக்கிச் சூடு விவகார வழக்கை தென்காசி போலீஸ் விசாரிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. சிபிஐ, ஆலங்குளம் காவல் நிலைய துணை ஆய்வாளர் இசக்கி ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பவரை கையில் எடுத்த போலீஸ்... தலைகீழாக மாறிய தமிழகத்தின் களநிலவரம்... அடுத்தது என்ன?