தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள 75,026 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகளின்படி, மொத்த வாக்குப்பதிவு சதவீதம் வரலாற்று உயர்வாக 85.15 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இது 2021 தேர்தலைவிட சுமார் 11.52 சதவீதம் அதிகமாகும். ஆண்கள் 83.57 சதவீதம், பெண்கள் 85.76 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர்கள் 60.49 சதவீதம் வாக்குகள் பதிவு செய்தனர். சுதந்திரம் அடைந்ததற்கு பின் அதிகப்படியாக வாக்குப்பதிவு சதவீதம் பதிவானது இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் என்று கூறப்பட்டது.

வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததை உச்ச நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூட பெருமிதம் தெரிவித்தார். இந்த நிலையில், தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவுதான் நடந்துள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரிகள் முறையீடு..!
சதவீதம் எதுவும் மாறவில்லை என்றார். பதிவு செய்யப்படாமல் எண்ணிக்கையாக மட்டுமே இருந்த லட்சக்கணக்கான வாக்குகள் SIR மூலம் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் கூடுதல் வாக்குப்பதிவு போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அது உண்மை இல்லை எனவும் கூறியுள்ளார். புதிதாக 25 லட்சம் வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர்.,அவ்வளவுதான் என்று விளக்கம் கொடுத்தார்.
இதையும் படிங்க: சிங்கப்பூர்-ல இருந்து வந்தும் ஓட்டுப் போட முடியல..! ஆதங்கத்தை கொட்டிய குடும்பத்தினர்..!!