தமிழக அரசியல் களம், திரைப்பட நட்சத்திரங்களின் தாக்கத்தால் அலங்கரிக்கப்பட்டு வரலாற்று காலமெல்லாம் இருந்தாலும், நடிகர் விஜய் போன்ற இளம் தலைமுறை நட்சத்திரத்தின் வருகை, அந்த அலைகளை புதிய உருவத்தில் உருவாக்கியுள்ளது. 2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், தனது பிரம்மாண்ட ரசிகர் பட்டாளத்தை அடிப்படையாகக் கொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு லட்சியம் வைத்திருக்கிறார்.
அவரது பேச்சுகள், கூட்டங்கள், கொள்கை அறிவிப்புகள் எல்லாமே தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால், இந்தப் புதிய அலையின் பின்னால், கடுமையான விமர்சனங்களின் கரையோரங்கள் உருவாகியுள்ளன. பாஜகவின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர் என்று விஜய்யைச் சாடுகின்றனர். கரூர் சம்பவம் சற்று பின்னடைவை தந்துள்ளது.

இந்த நிலையில் விஜயுடன் திருப்பாச்சி படத்தில் தங்கையாக நடித்த மல்லிகா விஜய்க்கு சப்போர்ட் செய்யும் வகையில் பேசி உள்ளார். நல்லது நினைத்தாலும் கெட்டது வரும் என்றும் கலிகாலத்தில் நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு நிறைய கெட்ட விஷயங்கள் வந்துவிடும் ஆனாலும் இறுதியில் அவர்தான் வெற்றி பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் பீகார் தேர்தல் களம்... NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்...!
விஜய் கேமரா முன் மட்டுமே நடிப்பார் என்றும் மக்களிடம் நடிக்க மாட்டார் எனவும் தெரிவித்தார். கூட்டத்தில் சதி செய்வதற்கு நிறைய பேர் வருவார்கள், அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கொட்டி தீர்க்கும் கனமழை... அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்... சுற்றுலா பயணிகளுக்கு தடை...!