திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட உத்தண்டகுமார வளசு பிரிவு அருகே காவல் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி உள்ள இடத்தில் சென்டர் மீடியம் என்று சொல்லக்கூடிய சாலை தடுப்பு மீது சவுக்கு கட்டை ஏற்றி வந்த லாரி மோதி உள்ளது. இதனால் அதை சரி செய்யும் முயற்சியில் லாரியை தள்ளி நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநர் மற்றும் அங்கு பணியில் இருந்த ரவிக்குமார் என்ற காவலரும் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதே தேசிய நெடுஞ்சாலையில் சைலோ வகை கார் ஒன்று அதிவேகத்தில் வந்து சென்டர் மீடியத்தை சரி செய்து கொண்டிருந்த காவலர் மற்றும் லாரி ஓட்டுநர் மீது மோதியது, இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் தள்ளி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேகமாக மோதியதில் காரில் பயணித்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கார் மீது லாரி மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி...!
இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுனர், காவலர் ரவிக்குமார் மற்றும் காரில் பயணித்த 4 பேர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலே பரிதாமாக உயிரிழந்தனர் இறந்த ஆறு பேரின் சடலங்களும் திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காங்கேயம் வெள்ளக்கோவில் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பந்திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தன் 4 வயது மகனை கட்டியணைத்து மரணித்த தாய்..! நெஞ்சை உலுக்குது..! சீமான் வேதனை..!!