தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் மீதான உரையை நிதி அமைச்சர் மரிய வில்சன் நிகழ்த்தினார். அடுத்த ஆண்டு மதுரை அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். டி என் சுடர் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் ஒரு லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்க 3200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு 8393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
புதிதாக ஐந்து தொழில் பள்ளி நிலையங்கள் நிறுவ தமிழக பட்ஜெட்டில் 90 கோடி ரூபாய் நிதி செய்யப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்காக 3.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் எஐ புதிய தொழில் பிரிவு உருவாக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திட்டம் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஏ ஐ திறன் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்தார். சிறப்பு நலன் செயல்பாடு திட்டத்திற்கு 11,157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களில் எஸ் எஸ் சி, ஆர் ஆர் பி, ஐ பி பி எஸ் போட்டி தேர்வுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்கு 3.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வெற்றி லேப்டாப் முதல் தங்க மோதிரம் வரை... முதல் பட்ஜெட்டில் அதிரடி மழை..! நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு..!!
தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு 2022 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறி உள்ளார். வேலையில்லா இளைஞர்களை திறன் மிகுந்தவராக மாற்றும் வெற்றி திறன் பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கு துறைக்கு 17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?