தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் மீதான உரையை நிதி அமைச்சர் மரிய வில்சன் நிகழ்த்தினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1485 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4414 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளிமலை நீரேற்று புனல் மின் திட்டம் விரைவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவகம் என்ற பெயரில் இந்தியாவின் முதல் எஐ நகரம் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு 2042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கைத்தறி, கைத்திறன் கதர் துறைக்கு 1678 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மாநிலத்தின் பிறப்பகுதிகளில் 50 லட்சம் தொழில் வணிக நுகர்வோருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குறை சூரியனின் மானியத் திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு உரை சூரியனின் மானியத் திட்டத்தில் சூரிய மின் பலகைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!
மின்பகிர்மான கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கோவை - அரியலூர் 765 கேவி மின் பகிர்மான பாதை திட்டத்திற்கு நான்காயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர விரிவாக்கத் திட்டத்திற்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 1543 கோடி ரூபாய் முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!