அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், டிடிவி தினகரன் தலைமையில் 2018-இல் அதிமுகவிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதாவின் பெயரை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து 165 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனது. அப்போது அது சுமார் 2.35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.
பின்னர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற அறிவிப்பை டிடிவி தினகரன் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொள்ளும் அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் ஆறாம் தேதியிலிருந்து தனது பரப்புரையை டிடிவி தினகரன் தொடங்குகிறார். அதன் முழு விவரம்;
இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!
06.04.2026 திங்கட்கிழமை- சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி
07.04.2026 செவ்வாய்க்கிழமை- பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி
08.04.2026 புதன்கிழமை - திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
09.04.2026 வியாழக்கிழமை - பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி
10.04.2026 வெள்ளிக்கிழமை - காரைக்குடி சட்டமன்றத் தொகுதி
11.04.2026 சனிக்கிழமை - திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி
12.04.2026 ஞாயிற்றுக்கிழமை - மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி
13.04.2026 திங்கட்கிழமை - திருவையாறு சட்டமன்றத் தொகுதி
15.04.2026 புதன்கிழமை - ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி
17.04.2026 வெள்ளிக்கிழமை - நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி
18.04.2026 சனிக்கிழமை - மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி.
இதையும் படிங்க: "FLASH BACK"... 9 வருடங்களுக்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் கால் வைத்த TTV தினகரன்..!!