அப்பட்டமான தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட திமுக பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு குழு செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான அருண்ராஜ் தெரிவித்தார்.
முதலில் தவெக தலைவர் விஜய் பரப்புரையை முடக்க திட்டம் போட்டு தோல்வி அடைந்த திமுக, இப்போது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களின் பரப்புரையையும் முடக்க திட்டம் போட்டு, அதிலும் தோல்வியை சந்தித்துள்ளது என்று கூறினார். திருச்செங்கோட்டில் இன்று சாலப்பாளையம் பகுதியில் முறைப்படி அனுமதி பெற்று பரப்புரை மேற்கொண்டு வந்தோம். ஆனால் அதே பகுதியில், அதே நேரத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மற்றும் அவரது கணவரும், திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளருமான சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தங்களுக்கு திட்டமிட்டு இடையூறு செய்யும் விதமாக பரப்புரையை தடுக்க முயன்றனர் என்று குற்றம் சாட்டினார்.

உங்களிடம் பரப்புரை செய்வதற்கான அனுமதி இருக்கிறதா? என்று நாம் கேட்க, "திமுகவின் -DNA" வை நிரூபிக்கும் வகையில் ஆபாசமாகவும், அவதூறாகவும் அநாகரிகமாகவும் பேசி அராஜகம் செய்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். உடனடியாக தேர்தல் ஆணையத்திடமும், காவல்துறையிடமும் அளித்ததாகவும் அனுமதி இல்லாமல் திமுகவினர் கொண்டு வந்த பரப்புரை வாகனத்தை உயர் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் இடையூறு செய்து திமுக நிர்வாகிகளை திருப்பி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்., தலைமை ஓகே சொன்னதால்தான் விஜயை சந்தித்தேன்!! உண்மையை போட்டு உடைத்த பிரவீன் சக்கரவர்த்தி!!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு களத்தில் குவியும் வெற்றிகளில் இதுவும் ஒன்று., களத்தில் நம்மை எதிர்கொள்ள முடியாமல், திருச்செங்கோட்டில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை பரப்புரை செய்யவிடாமல் திமுகவினர் அட்டூழியம் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். விசில் போடு திருச்செங்கோடு… இந்த அருண்ராஜ் என்றும் உங்களோடு என்று கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி தவெக வேட்பாளர் குடும்பத்துடன் தலைமறைவு!! விலைக்கு வாங்கியது அதிமுக?! கடுகடுக்கும் விஜய்!