கரூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூரில் நிகழ்ந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று தமிழக வெற்றிக்கழகம் குற்றம் சாட்டி வருகிறது.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக சதி வலை எனக் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அறிவழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரூர் பிரச்சார கூட்டத்தில் போலீசார் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறினார். விஜய் மீது காலணி வீசப்பட்டது என்றும் கரூர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

விஜய் பிரச்சார கூட்டத்தில் இதுவரை எங்கும் தடிக்கடி நடத்தவில்லை., ஆனால் கரூரில் மட்டும் ஏன் தடியடி நடத்தப்பட்டது என்றும் கரூரில் விஜய் பிரச்சாரம் செய்யும் போது பிரச்சனைகள் ஏற்படலாம் என ஏற்கனவே பரவலாக கூறப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டதுடன் தடியையும் நடத்தப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தான் வலிமையான அமைப்பு என்றும் அந்த அமைப்பு விசாரித்து உண்மையை வெளிவந்து வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் தற்குறி! கொலை குற்றவாளி...! விஜயை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்… சர்ச்சை!
குழந்தைகள் உள்ளிட்டோர் இறந்த சம்பவத்தில் அரசியல் செய்வது கீழ்த்தரமானது என்றும் ஒரு சம்பவம் நடந்த பின்னர் அதற்கான காரணங்களை அடுக்குவதாக குற்றம் சாட்டினார். பொதுமக்கள் அதிகம் கூடும் போது பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை எனவும் வழக்கறிஞர் அறிவழகன் கூறினார். அது மட்டுமில்லாமல் கரூரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு காரணம் யார் என்ற கேள்விக்கு பலரும் ஒரே நபரை தான் கைநீட்டுவதாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: என்ன தான் நடக்குது? விஜயின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…!