தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும், எதிர்பாராத வகையில் பெரும் தோல்வியை சந்தித்தது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி ஒற்றைப் பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாக இருந்தாலும், ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்தது.
தி.மு.க. 59 இடங்களுக்கு குறைந்தது, அதிமுக 47 இடங்களைப் பெற்று, முதல் முறையாக தொங்கு சட்டமன்றம் உருவானது. இந்தத் தோல்வி தி.மு.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 2021 தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தியிருந்தாலும், மக்கள் ஆதரவு கணிசமாகக் குறைந்தது.

ஸ்டாலின் தானே தனது தொகுதியான கொளத்தூரில் தோல்வியைத் தழுவினார். இதைத் தொடர்ந்து, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு அரசியல் கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மற்ற கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.
இதையும் படிங்க: ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு... தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!
மேலும் திமுகவினர் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், கிள்ளியூர் திமுக பேரூராட்சி தலைவி தவெகவில் ஐக்கியம் ஆகினார். அதுமட்டுமல்லாது கிள்ளியூர் திமுக கூடாரம் காலியாகும் நிலையில் உள்ளது. 9 வார்டு கவுன்சிலர்கள் உட்பட 200 பேர் தவெகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க: எரிக்காற்று உருளை விலை உயர்வு... மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் வைத்த கோரிக்கை..!