தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கையின் படி மீன்பிடித் தடை காலத்தில் மீனவர் இழப்பீடாக மீனவர் குடும்பங்களுக்கு ரூ.20,000 வழங்கக் உத்தரவிட கோரிய வழக்கு. இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டதால் பரபரப்பு
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்திற்கு நிவாரணமாக 8000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதால் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்
. ஆகவே ஆந்திரா, கோவா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கபைப் போல மீன்பிடி தடை காலத்தில் 20 ஆயிரம் ரூபாயை மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: "CM விஜய் என்னுடன் செஸ் விளையாடினார்"..!! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா..!!

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் 20000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தது" என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், "இது கொள்கை முடிவு தொடர்பானது" என தெரிவிக்கப்பட்டது அதையடுத்து நீதிபதிகள்"வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை செயலர்,நிதித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீ்ன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்வளத்தை பெருக்கும் நோக்கில், இந்த நாட்களில் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மீன்பிடிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பை சார்ந்து வாழும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால் மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்கப்படுகிறது. 2024ம்ஆண்டு முதல் இந்த நிவாரண தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை ரூ.8,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் பரவலாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலின் போது, தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியாக இந்த ரூ.20,000 நிதியை வழங்குவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "அராஜகம்"..! மாரிதாஸ் தடாலடி கைது... தவெக அரசை பந்தாடிய நயினார்..!!