சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றிக்கழக அரசை விமர்சித்து பேசி இருந்தார். அதற்கு தமிழக வெற்றி கழகம் பதிலடி கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, முதலமைச்சர் விஜய் தான் களவாணி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கி பேசினார். அதிமுக எம்எல்ஏக்களாக இருந்தவர்களை தமிழக வெற்றி கழகம் களவாடியது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக அரசின் திட்டங்களால் மக்களுக்கு நன்மை இல்லை என்றும் அப்போது குறிப்பிட்டு பேசினார். கரூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் ஆக்கப்பூர்வமாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார். கூட்டணி கட்சி தலைவர்களை அரவணைத்தால் தமிழக வெற்றி கழக அரசு நீடிக்கும் என்றும் பேசினார்.

தமிழ்நாட்டில் இரவல் ஆட்சி நடப்பதாக தெரிவித்திருந்தார். தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா., இல்லையா என்று தெரியவில்லை எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், கட்சி நடக்கிறதா? கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை என்று தமிழக வெற்றி கழகம் விமர்சனம் செய்துள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!
திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடநாடு கொலைவழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் டிவிகே அரசு பற்றி குறைகூறுவது குபீர் சிரிப்பு காமெடி என்றும் கிண்டலடித்துள்ளது. கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி அனுமதி இல்லாமல் யாரையும் கட்சியில் சேர்க்கக் கூடாது! அதிமுகவில் அதிரடி உத்தரவு!