தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் பாரம்பரிய கோட்டைகளாகக் கருதப்பட்ட மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளைத் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியுள்ளது. அதிமுகவில் இருந்து வெற்றிபெற்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இந்த வெற்றி அதிமுகவின் அரசியல் நிலையைப் பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.இந்த நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசும்போது, திமுகவும் அதிமுகவும் கூட்டாளிகள்தான் என்றும், பிரச்சாரத்தின் போது இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
திமுக அதிமுகவையும் அதிமுக திமுகவையும் விமர்சிக்காமல் இடைத்தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்ததாக அவர் குறிப்பிட்டார். அதேநேரம் எடப்பாடி பழனிச்சாமியைக் கடுமையாக விமர்சித்த அவர், சொத்துக்களைக் காப்பாற்ற ஸ்டாலினையும் உதயநிதி ஆட்சியில் அமர வைக்கவும் எடப்பாடி பழனிச்சாமி பாடுபடுகிறார் என்று கூறினார். தனது சொத்துக்களைக் காப்பாற்ற அதிமுகவை லெட்டர் பேட் கட்சியாக மாற்றிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அவர் தாக்கிப் பேசினார்.அதிமுகவின் கோட்டையாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி இழந்துவிட்டார் என்று நிர்மல் குமார் சுட்டிக்காட்டினார்.

அதிமுகவைத் தோல்வியடைய வைத்து லெட்டர் பேட் கட்சியாக மாற்றி தனது சேலத்து வீட்டுக்குக் கொண்டுசென்றுவிட்டார் எனவும் அவர் விமர்சித்தார். அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வி அடைந்து தோல்வியில் சாதனை படைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறிய அமைச்சர், உண்மையான அதிமுகத் தொண்டர்கள் கட்சியையும் கட்சி அலுவலகத்தையும் எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!
இடைத்தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசிய நிர்மல் குமார், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அடுத்து வரும் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகந்தான் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முதல்வர் விஜய் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்ததன் வெளிப்பாடுதான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியையும் மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி!