தாராபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுத்தேர்தல் நடந்து முடிந்து அஞ்சு மாதம்தான் ஆகியிருக்கிறது. அஞ்சு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் இந்த இடைத்தேர்தல். இது எதனால் வந்தது? இதற்குக் காரணமானவர்கள் யார் என்று தயவுசெய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சத்தியத்துக்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை, மக்களான நீங்களே இப்போது என்ன சொல்லிக் கூப்பிடுகிறீர்கள்? ‘பெட்டி பாமா’. இன்னொன்று இருக்கிறது, ‘பல்டி பாமா’. எப்படித்தான் அந்த உருவத்தை வைத்துக்கொண்டு பல்டி அடித்தார்கள் என்று தெரியவில்லை” என பேசியிருந்தார்.
இதனையடுத்து பெண்களை உருவகேலி செய்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தவெக அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பகக்த்தில் தவெக ஐடி விங்க் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: முதல் நாளே இப்படியா?... வெற்றி பயணத் திட்டத்தை காற்றில் பறக்கவிட்ட நடத்துநர்... டிக்கெட் எடுக்கச் சொல்லி பெண் பயணியிடம் தகராறு...!
மாண்பு, கண்ணியம் பற்றி காணொளி வெளியிட்டு கதறிய போலி பிம்பத்திற்கு, ‘மாண்பு’ என்பதற்கான அர்த்தமே தெரியாது என்பது, தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததிலிருந்து உறுதியாகிறது.
பெண்களை இழிவாகப் பேசுபவர்தான் 75 வருட கட்சியின் தலைவரா ? தேர்தல் களத்தில் உள்ள பெண்களை உருவகேலி செய்வதும், அவர்களைப் பற்றி அநாகரிகமாகப் பேசுவதும் தான் ஒரு மாண்பா?
பெண்களை அவமதிப்பது, ஆபாசமாகப் பேசுவது என அனைத்தையும் செய்துவிட்டு, பெரியாரை கொள்கைத் தலைவர் என்றும், சமத்துவம், சமூகநீதி என்றும் முழக்கமிடும் பச்சை அயோக்கியத்தனத்தை கட்டுமரக்காலம் தொட்டே செய்வது திமுகவின் DNA-வாக இருந்தாலும், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வரும் இக்காலத்தில் இதை கிஞ்சித்தும் சகித்துக்கொள்ள முடியாது.
ஸ்டாலின் தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததை தவெக வன்மையாகக் கண்டிக்கிறது என பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!