அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் என்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது திருவுருவப்படத்திற்கும், திருவருவற்றைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை அடித்தளமாக நிலைநிறுத்திய அண்ணல் அம்பேத்கர், எளிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்த தலைவராகப் போற்றப்படுகிறார்.

அவரது 135-வது பிறந்தநாளான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் விஜய் தனது பதிவில், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர் அம்பேத்கர் என்று குறிப்பிட்டுள்ளார். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வாத்தி கம்மிங்... திருப்பூரில் பரப்புரை..! நீலங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய்..!!
நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று என்றும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று தெரிவித்தார். நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம் என கூறியுள்ள விஜய், மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சர்ச்சைகளை தாண்டி..!! தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் தீவிர வாக்கு சேகரிப்பு..!!