தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் அமைந்துள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இக்கட்சி 2024 பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கப்பட்டு, இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த விழா கட்சியின் வளர்ச்சியையும், எதிர்கால அரசியல் இலக்குகளையும் உறுதிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கட்சியின் கொள்கை வழிகாட்டிகளான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இது கட்சியின் சமூக நீதி, சமத்துவம், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை மீண்டும் நினைவூட்டும் நிகழ்வாக இருந்தது.

பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய விஜய், தமிழ்நாட்டில் மிக பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறோம் என தெரிவித்தார். கட்சியின் தலைமை தொண்டனாக தனது வாழ்த்துக்களை கூறிக் கொள்வதாக கூறினார். எம் ஜி ஆரின் ரேடியோ பேட்டியை சுடடிக்காட்டி விஜய் பேசினார். எம் ஜி ஆர் அரசியலுக்கு வந்த போதும் கிண்டல் செய்ததாகவும் குறிப்பிட்டு பேசினார்.
1977 ஆம் ஆண்டு போல பழைய நஞ்சு போன தீஞ்சு போன ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறினார். அநீதி, அராஜகம், தில்லுமுள்ளு எல்லாம் திமுக முதற்றே உலகு என விஜய் விமர்சித்தார். மக்களின் பிரதிநிதியாக இருப்பது தவெக என தெரிவித்தார். 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள தகர டப்பாவை எடுத்து உருட்டுவதாகவும், பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும் பழைய டப்பா உருட்ட தான் தெரியும் என கூறினார். கருத்து கணிப்பு இல்லை என்றும் கடுப்பு கணிப்பு எனவும் விமர்சித்தார். எல்லா வீட்டிலும் TVK இருப்பதாக கூறினார். முதல்வரை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் TVK விசிலுக்கு தான் ஓட்டுப் போடுவேன் என கூறிவிடுவார் என்றார்.
இதையும் படிங்க: 3ஆம் ஆண்டில் கால்பதிக்கும் TVK... கட்சிக் கொடி ஏற்றி வைத்த விஜய்...!
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... சூடு பிடிக்கும் அரசியல் களம்..! தவெக மாநில சட்டப் பாதுகாப்பு குழு அறிவிப்பு..!