த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். இந்த உற்சாகம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கரூர் மாவட்டத்தின் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம்.

கரூர் சம்பவத்தால் முடங்கிப் போன தமிழக வெற்றிக் கழகம் மெல்ல மீண்டு வருகிறது. கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தவெக தொண்டர் அணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐஜி ரவிக்குமார் தலைமையில் குழு அமைத்துத் தொண்டர் அணிக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சிபிஐ அடுத்த கட்ட நகர்வு... பனையூருக்கு விரையும் அதிகாரிகள்... சூடு பிடிக்கும் விசாரணை...! 
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதற்கிடையில், தமிழக வெற்றி கழகத்தின் மகளிரணியில் முதற்கட்டமாக மாவட்ட அளவிலான 65 நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 2026 தேர்தலை திறம்பட எதிர்கொள்ள தமிழக வெற்றி கழகம் முனைப்புக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 
இதையும் படிங்க: பிளான் பக்காவா இருக்கணும்… தவெகவுக்கு வழிகாட்ட Ex. ஐஜி தலைமையில் குழு அமைப்பு..!