இலங்கையின் நாவலப்பிட்டியில் 1917-ஆம் ஆண்டு இன்றைய தினம்தான் பிறந்தார் எம்.ஜி.ஆர். என்றாலும், தமிழக மண்ணில்தான் அவர் மக்களின் மனதில் அழியாத இடம் பிடித்தார். நடிகராகத் தொடங்கி, அரசியல்வாதியாக மாறி, முதலமைச்சராக ஆட்சி செய்து, எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்தவர். அவரது பிறந்த நாள் இன்று வெறும் தேதி அல்ல. அது ஒரு கொள்கையின் நினைவு நாள், மனிதநேயத்தின் கொண்டாட்ட நாள்.
இன்று தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் திலகம் வாழ்க என்ற முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர். என்றாலே ஏழை எளிய மக்களின் நலனுக்காக வாழ்ந்தவர், அவர்களுக்கு உணவு, கல்வி, வேலைவாய்ப்பு என்று பல திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் என்ற நினைவு எல்லோருக்கும் முதலில் வருகிறது.

இன்று எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள். தமிழ்நாடு முழுவதும் இந்த நாள் எப்போதும்போலவே மிகுந்த உற்சாகத்துடனும், பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன்றும் மக்களின் மனதில் நிலைத்திருக்கிறார் என்பதற்கு இந்த கொண்டாட்டங்களே சாட்சி.bகாலையில் இருந்தே சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன.
இதையும் படிங்க: என்னை கூப்பிடல..! பிரதமர் பங்கேற்கும் மாபெரும் கூட்டம்..! ஓபிஎஸ் விளக்கம்...!
எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தினார். தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக, பேரறிஞர் அண்ணா ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் புகழாரம் சூட்டினார். எம்ஜிஆர் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: MGR..! மகத்தான பங்களிப்பு... தொலைநோக்குப் பார்வை... புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!