தஞ்சாவூரில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது முதலமைச்சர் விஜய்யை ‘டம்மி முதல்வர்’ எனக் குறிப்பிட்டு, காவிரி நீர் விவகாரத்தில் அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும், விவசாயிகளின் பிரச்சினைகளைப் புறக்கணித்து திமுக மீது வழக்குகள் பதிவு செய்வதிலேயே கவனம் செலுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த சிலர் நடிகை ஒருவரின் பெயரை கூறி கூச்சலிட்டனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் சிரித்தபடி ஒரு கருத்தைத் தெரிவித்தார். தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும் எனக் கூறிய அவர், பின்னர் காவிரியைக் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார். இந்தக் கருத்து இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், நடிகை த்ரிஷாவை மறைமுகமாகச் சுட்டியதாகவும் விமர்சிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரவியது.
இதையும் படிங்க: விஜய் அரசு vs DMK..!! கைதாக முடியாது... உதயநிதி ஸ்டாலின் ஹைகோர்ட்டில் முறையீடு..!!
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் அவரை கைது செய்வதற்காக போலீசார் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக அவசர முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அவசர வழக்காக விசாரிக்கக் கூடிய முறையீடு ஏற்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சாவூர் போலீசார் முனைப்பு காட்டி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக சட்டமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கைது செய்ய முயற்சிப்பதாக உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருக்கிறது.
அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்று நண்பகல் 12 மணிக்கு விசாரிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். எனவே மதியம் 12 மணி வரை உதயநிதி விவகாரத்தில் கைது நடவடிக்கை வேண்டாம் என காவல்துறையிடம் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி முறையீடு ஏற்கப்படுமா? அல்லது அவர் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.
இதையும் படிங்க: உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!