அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான் மீது போர் தொடங்கியதற்கு அதிபர் டிரம்ப் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், செனட் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் டிரம்புக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். இதனால் போர் தொடர்வதற்கு காங்கிரஸ் ஒப்புதல் தேவையில்லை என்பது உறுதியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' எனும் இணைந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேற்காசியா முழுவதும் பதற்றம் உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில், டிரம்பின் போர் முடிவுக்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் 2 நாட்கள் ரகசிய விவாதங்கள் நடைபெற்றன. போர் அதிகாரத் தீர்மானம் (War Powers Resolution) மூலம், எதிர்கால தாக்குதல்களுக்கு காங்கிரஸ் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என ஜனநாயக கட்சியினர் முயன்றனர். நேற்று (மார்ச் 4) நடந்த ஓட்டெடுப்பில் இந்தத் தீர்மானம் 47-53 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இதையும் படிங்க: ஈரான் போரில் சிறப்பா செயல்படுறோம்!! வலிமையா இருக்கோம்!! தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் ட்ரம்ப்!!

பெரும்பாலான குடியர்ப்பு கட்சி செனட்டர்கள் (ஒருவர் தவிர) டிரம்புக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜான் ஃபெட்டர்மேன் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளுக்கு செனட் ஆதரவு கிடைத்துள்ளது.
போர் தொடங்கி 6 நாட்களாகிய நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், "பேச்சுவார்த்தை மூலம் போரைத் தவிர்க்க ஈரான் முயன்றது.
ஆனால் அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதால் தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளின் இறையாண்மையை மதிப்பதாகவும், பிராந்திய ஸ்திரத்தன்மை கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் போர் எண்ணெய் விலை உயர்வு, உலக பொருளாதார பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தி வருகிறது. செனட் ஓட்டெடுப்பு டிரம்புக்கு பெரும் வெற்றியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஈரானை சுக்குநூறாக்க அமெரிக்க பயன்படுத்திய ஆயுதங்கள்!! தவிடு பொடியான வான்பாதுகாப்பு!! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!