கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: அமெரிக்கா ஈரான் போரின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் இருந்து வருகிறது. இந்தியா எரிசக்திக்காக 70 சதவீத பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய சூழலில் போர் காரணமாக ஈரான் எல்லை வழியாக வரும் கப்பல்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துப் பாதிப்பு உள்ளானது.
பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக உள்நாட்டு பயன்பாட்டிற்கான வணிக சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு போடப்பட்டது. கல்ளச்சந்தை விற்பனை மற்றும் விதிகளுக்கு எதிராக குறிப்பிட்ட நபர்களுக்கு செல்லாமல் செயல்படுத்தப்பட்டு வந்தது.
காலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல், டீசலுக்கான சிறப்பு காலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் பாதுகாப்பு கருதியும் மற்றும் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் "தீயசக்தி திமுக"..!! MLA வானதி சீனிவாசன் கண்டனம்..!!
இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். எல்.பி.ஜி சிலிண்டர் பொருத்தவரை கடந்த 12 ஆண்டுகளில் 11 கோடி ஏழை பெண்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கனிமொழி அடிப்படையில் இருந்து அரசியல்வாதியாக வராமல் குடும்ப சிக்கல் காரணமாக டெல்லி அரசியல்வாதியாக அறியப்பட்டவர். ஆனாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தமிழக பிரச்சனைகளை பேசுவதற்கும், கட்சி வளர்ச்சிக்காக உழைத்து வருபவர் அவர் மாநில அரசுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம். கலால் வரி குறைப்பு தொடருமா என்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும்.
தேசிய ஜனநாயக கூட்டணி எந்த அளவிற்கு தங்கள் கூட்டணியை ஒற்றுமையாக வைத்துள்ளனர். எவ்வளவு சுமுகமாக வைத்துள்ளனர் என்பதை கடந்த சில நாட்களாக பார்க்க முடிகிறது. தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து 48 மணி நேரத்தில் எந்தந்த தொகுதிகள் என்பதை அதிமுக அலுவலகத்தில் வைத்து அறிவித்தனர். இப்போது வேட்பாளார் பட்டியலை வெளியிட்டு அதிமுக பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். கூட்டணி கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேகமாக தேர்தல் களத்திற்கு வந்துகொண்டுள்ளது. அதிமுக வேட்பாளார்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றார்.
இதையும் படிங்க: தொடரும் பாலியல் வேட்டை... வாய் கூசாம வசனம் பேசுறீங்களே ஸ்டாலின்? பந்தாடிய வானதி சீனிவாசன்..!