சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகர்நோன்புத் திடலில் தனியார் தொலைக்காட்சி சார்பில் தேர்தல் விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்தார். விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி பேசத் தொடங்கிய சமயத்தில், தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பி தகராறில் ஈடுபட்டனர்.
சிலர் மேடை நோக்கி நாற்காலிகளையும், கற்களையும் வீசத் தொடங்கினர். இந்தத் திடீர் அராஜகத்தால் விவாத மேடையில் பெரும் கலவரம் ஏற்பட்டது. தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே அடிதடி மோதல் உருவானது. திருப்புவனம் பேரூராட்சி சேர்மனும் தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளருமான சேங்கை மாறன் இந்தச் சம்பவத்தில் தூண்டுதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் தாக்குதலில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த தொகுப்பாளர் மீது நாற்காலி நேரடியாக விழுந்தது. அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இந்த சம்பவத்திற்கு பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்தார். திமுகவினர் மேடையை நோக்கி நாற்காலிகளை வீசி தாக்குதல் நடத்தியதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த செய்தியாளர் தலையில் பலத்த காயமும், காரைக்குடி செய்தியாளருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் தீயசக்தி திமுகவினரின் அராஜக போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடரும் பாலியல் வேட்டை... வாய் கூசாம வசனம் பேசுறீங்களே ஸ்டாலின்? பந்தாடிய வானதி சீனிவாசன்..!
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியில்லாமல் வன்முறையை கையில் எடுப்பது திமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது என்றும் தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்களை காவல் துறை உடனடியாக கைது செய்து ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையின் சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து போதுமா? தமிழ்நாட்டை கொலை கூடாரமாக்கிய டாஸ்மாக் மாடல் அரசு... வானதி சீனிவாசன் தாக்கு..!!