திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே உள்ள உடையாம்பட்டியை சேர்ந்தவர் சுகராஜ்(வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற் பாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் முருகேஸ்வரிக்கும், சுகராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்த போது சுகராஜூக்கும் முருகேஸ்வரிக்கும் மீண்டும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது முருகேஸ்வரி வீட்டிலிருந்த தோசை கல்லால் சுகராஜை தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுகராஜ் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதன் பின்னர் முருகேஸ்வரி வடமதுரை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
இதையும் படிங்க: சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!
அதனைத் தொடர்ந்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சுகராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தோசை கல்லை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் முருகேஸ்வரியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மனைவியே கணவனை தோசை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கண்ணை மூடி தூங்கிய சித்ரா... நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம்... அரண்டுபோன ஆத்தூர்...!