முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு, மூன்றாவது முறையாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 27 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த விஜய் - சங்கீதா தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் திருமண பந்தத்தை சட்டப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வர கோரி சங்கீதா தரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கின் முந்தைய விசாரணை ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றபோது, மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சூழல் நிலவியது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

இதற்கிடையில், மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்புகளை வகித்து வரும் முதலமைச்சர் விஜயின் அலுவல் நெருக்கடியை கருத்தில் கொண்டு, அவருக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டதாகவும், தேவையெனில் காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோடை கால நீதிமன்ற விடுமுறை மற்றும் நிர்வாக மாற்றங்களுக்குப் பின்னர், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இரு தரப்பினரின் சட்ட பிரதிநிதிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது வாதங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கக்கூடும் என சட்ட வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ள நிலையில், முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய இந்த குடும்பநல வழக்கு, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இதன் அடுத்தகட்ட விசாரணை குறித்த தகவல்களை பொதுமக்களும் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஆச்சரிய குறிகளா.? ஆபாச பொறுக்கிகளா"..? என்ன நடக்குதுன்னு தெரியுமா விஜய்..? வானதி சீனிவாசன் விளாசல்..!!