நடிகரும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான திருமண உறவு குறித்து தற்போது பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சங்கீதா, விஜயிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சங்கீதா, விஜயின் ரசிகையாக இருந்து பின்னர் அவரை மணந்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் அவ்வப்போது எழுந்து வந்தன. குறிப்பாக விஜய் அரசியல் களத்திற்கு முழுமையாகக் களமிறங்கிய பிறகு, சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது, லண்டனில் தங்கியிருப்பதாகக் கூறப்படுவது போன்ற தகவல்கள் இந்த வதந்திகளுக்கு முக்கியமாக அமைந்தன. சமீப காலமாக இந்த விரிசல் மேலும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தகவல் தற்போது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. இருப்பினும், இது போன்ற செய்திகள் கடந்த காலங்களில் பலமுறை வதந்திகளாகவே தோன்றி மறைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்.. களமாடும் கட்சிகள்... தவெக செயல்வீரர்கள் கூட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு..!!
ஆனால் இம்முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுவதால், இது முந்தைய வதந்திகளை விட தீவிரமானதாகத் தோன்றுகிறது. இரு தரப்பினரும் தனியார் வாழ்க்கையை பொதுவெளியில் வைத்து விவாதிக்க விரும்பாதவர்கள் என்பதால், முழு உண்மை என்ன என்பது நீதிமன்ற நடவடிக்கைகள் அல்லது அதிகாரப்பூர்வ அறிக்கை மூலமே தெரியவரும்.
இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!