அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை தான் ஒருங்கிணைப்பேன் என்று உறுதியோடு செயல்பட்டு வந்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருப்பது அரசியலில் திருப்புமுனையாகவே பார்க்கப்படுகிறது.
காரணம் 2026 சட்டமன்ற தேர்தலை மிகவும் முக்கியமாக கையில் எடுத்துள்ள தமிழக வெற்றிக்கழகம் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளின் வழிகாட்டுதல் இல்லாமல் திணறுகிறது என்று ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தது. இளைஞர்களின் ஆதரவு இருந்தாலும் கூட விஜயின் கட்சிப் பயணத்தை திட்டமிடுவது சவாலாகவே இருந்து வந்தது.

சரியான திட்டமிடல் இல்லை என்றும் விஜய்க்கு சரியான வழிகாட்டுதல் கொடுப்பதற்கு யாரும் இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தின் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை வரவேற்று விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையனுக்கு ‘தலைமை’ பொறுப்பு... தவெகவில் கால் வைத்ததுமே 2 அதிமுக்கிய பதவிகளை அள்ளிக்கொடுத்த விஜய்...!
20 வயது இருக்கும் போதே எம்ஜிஆரை நம்பி அவரது மன்றத்தில் இணைந்து இளம் வயதிலேயே எம்எல்ஏ பதவியை ஏற்றவர் செங்கோட்டையன் என்று தெரிவித்தார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த செங்கோட்டையனின் அரசியல் அனுபவம் தமிழக வெற்றி கழகத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். செங்கோட்டையனின் களப்பணியும் அரசியல் அனுபவமும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அண்ணன் செங்கோட்டையனை வரவேற்கிறேன் என்றும் நல்லதே நடக்கும் எனவும் விஜய் மகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா...!! இது நம்ப லிஸ்டுலேயே இல்லையே... செங்கோட்டையனுக்கு விஜய் கொடுத்த முக்கிய டாஸ்க்... திமுக, அதிமுக செம்ம ஷாக்...!