தூத்துக்குடி இரண்டு மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில் தேர்தலுக்கு வாக்களிக்க சென்ற கணவரை கடத்தி வைத்து போதை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருவதாக மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் காவல்துறையில் புகார் அளிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சாருமதி இவர் தூத்துக்குடியில் ஒரு ஐஏஎஸ் அகாடமியில் போது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அகரம் வடக்கு பகுதியைச் சேர்ந்த மருதநாயகம் என்பவரும் அங்கே படித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது இதைத்தொடர்ந்து கடந்த ஒன்றை வருடங்களாக அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மருதநாயகத்திற்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை கிடைத்துள்ளது . இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த 24.3.2026 ஆம் ஆண்டு தென்காசியில் உள்ள திருமலை கோயில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் . இருவரும் பாளையங்கோட்டையில் உள்ள சாருமதியின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!
இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ஓட்டுப் போட்டுவிட்டு வருகிறேன் எனக்கூறி மருதநாயகம் அவரது ஊரான வல்லநாடு அகரத்திற்கு சென்றுள்ளார் ஆனால் மருதநாயகம் திரும்பி வரவில்லை. மருதநாயகம் கடந்த 24ஆம் தேதி தனது மனைவி சாருமதிக்கு போன் பண்ணி தனது வீட்டில் உள்ள தனது தந்தை மற்றும் உறவினர்கள் தன்னை அடித்து துன்புறுத்து வருவதாக தன்னை மீட்கும்படி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சாருமதி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பாளையங்கோட்டை துணை ஆணையர் அலுவலகம் மேலும் முறப்பநாடு காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார். இதில் காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் புகார் அளித்த சாருமதியை மிரட்டும் வகையில் செயல்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் சாருமதி புகார் அளித்ததை தொடர்ந்து முறப்பநாடு காவல்துறையினர் சாருமதியின் கணவர் மருதநாயகத்தை தூத்துக்குடியில் உள்ள போதை மறுவாழ்வு இல்லமான நிஷா பவுண்டேஷனில் அடைத்து வைத்திருப்பதாக கூறி அங்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர். மேலும் கணவரிடம் பேச அனுமதியும் மறுத்துள்ளனர்
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சாருமதி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து தனது கணவரை உடனடியாக மீட்டு தர வேண்டும் அவரை ஆணவ கொலை செய்து விடுவோம் என உறவினர்கள் விரட்டி வரும் சூழ்நிலையிலும், அவருக்கு எந்தவித மது மற்றும் போதை பழக்கம் இல்லாத நிலையில் அவரை போதை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து வைத்து துன்புறுத்து வருகின்றனர். எனவே உடனடியாக தனது கணவரை மீட்டு தர வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ளார்
இதையும் படிங்க: மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?