• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    4 வருஷத்துல சொல்ல ஒரு நல்ல திட்டம் இல்ல... இதெல்லாம் ஒரு ஆட்சியா? - ஸ்டாலினை பொளந்தெடுத்த எடப்பாடி!

    திமுக அரசின் 4 ஆண்டு கால ஆட்சி நிறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
    Author By Amaravathi Thu, 08 May 2025 11:37:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-edappadi-palanisamy-slams-mk-stalin

    முதலமைச்சர் ஸ்டாலின்  திமுக ஆட்சி 2021 முதல் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை ‘ஸ்டாலின் மாடல் ஆட்சி' என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி, நிதிப் பற்றாக்குறை. கடன் வாங்குவதில் முதலிடம். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் கேத்திரபாக மாறிய தமிழ் நாடு, தினசரி கொலைகள் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    ஸ்டாலின் மாடல் ஆட்சியில், நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு இல்லாததால், திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை தாமதம் ஆகின்றன. உதாரணமாக, விடியா திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன என்றும், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் ஒரு சொட்டு நீர்கூட தேங்காமல் வடியும் என்றும், முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், நகராட்சித் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேட்டி அளித்தனர். ஆனால், 2021 மற்றும் 2022 ஆண்டில் பெய்த சிறு மழைக்கே சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதுதான் நிதர்சனமான உண்மை.

    Edappadi palanisamy

    உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச் சாவடி முறைகேடுகள், மறு வாக்குப் பதிவு அதிகாரிகள் மிரட்டப்படுதல் போன்றவை அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன. தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மாநில அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது. கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் தாமதம். 

    இதையும் படிங்க: கைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்.. 4 தொகுதிகளை குறிவைத்து இறங்கும் எடப்பாடியார்..!

    உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு ஆகியவை மாநில வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளன. உதாரணமாக, கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றம் சுமார் பத்து மாத காலம் சென்னை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியதை அனைவரும் அறிவார்கள். சென்னை மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மெட்ரோ திட்டங்கள் போன்றவை நிதி நெருக்கடியால் தடைபட்டன. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்று வாய்ஜாலம் பேசிய திரு. ஸ்டாலின், அதில் 50 சதவீதம்கூட கொடுக்க முடியாதபடி பல நிபந்தனைகளை விதித்தார்.

    Edappadi palanisamy

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றது. தொடர் கொலைகள், ஜாதி மோதல்கள், பாலியல் வன்கொடுமைகள், தனியாக வசிக்கும் முதியோர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல், கொலை செய்யப்படுதல் போன்ற சட்ட விரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    காவல் துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று திரு. ஸ்டாலின் கூறினாலும், குற்றங்களைத் தடுப்பதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத மாநிலமாக, நகரமாக மாற்றியது தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் சாதனை. கடந்த நான்கு ஆண்டுகளாக, போதைப் பொருள் புழக்கம் மற்றும் பயன்பாடு தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சென்னை, கோவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் மற்றும் கடத்தல் அதிக அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப் பொருள் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. இவைகளைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இந்த அரசு வாய்ஜாலம் காட்டினாலும், அனைத்தும் ஏட்டளவிலேயே உள்ளது.

    Edappadi palanisamy

    கொலைகள் மற்றும் வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நான், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி இவற்றைப் பற்றி சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும் பலமுறை எடுத்துக் கூறியும், இந்த அரசிடம் கடுமையான, உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. குறிப்பாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச் சாராய மரணம் இரண்டு முறை நிகழ்ந்தேறியதுதான் ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை.

    இந்த அரசின் மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளை, குறிப்பாக அமைச்சர் ஒருவரே அளித்த பேட்டிக்கு இதுவரை எந்தவிதமான மறுப்பையும் திரு. ஸ்டாலினால் அளிக்க முடியவில்லை. நான், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஸ்டாலின் மாடல் அரசின் தவறுகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியும், அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளக்கூடிய மனப் பக்குவம் இல்லாத நிலையில்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    Edappadi palanisamy

    இந்த நான்காண்டு கால ஆட்சியில், அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறிப்பாக, அத்திக்கடவு-அவினாசி திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, குடிமராமத்துத் திட்டம், விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேர மின் சப்ளை, 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியது, அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் உட்பட 17 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஆரம்பித்தது. சுமார் 50 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றியது, பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மெட்ரோ நகரங்களில் முதலிடமாக சென்னையை தொடர்ந்து தக்கவைத்தது என்று எங்களது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு இதுபோல் ஒரு சாதனையை குறிப்பிட்டுக் கூற இயலுமா?

    இதையும் படிங்க: கொலைகளும், மதக்கலவரங்களும்.! 24 மணி நேரத்தில் இத்தனை சம்பவங்களா? லிஸ்ட் போட்ட இபிஎஸ்..!

    மேலும் படிங்க
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    பக்தி
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சினிமா

    செய்திகள்

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    உலகம்
    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share