விறுவிறுப்பான கதைக்களத்துடன் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மனசெல்லாம். திடீரென மணமேடையில் ஜோடி மாறி திருமணம் நடைபெறும் நிலையில், இதனால் இவர்களின் வாழ்க்கையில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் அருள் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெய் பாலா சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள எபிசோடுகளில் சுரேந்தர்... அருள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, ஜெய் பாலாவின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் சுரேந்தர் சரியான தேர்வாக இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

சுரேந்தர் 'மனசெல்லாம்' சீரியல் மூலம் தற்போது ஜீ தமிழில் தொடரில் நடிக்க உள்ளார். இதற்க்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான, திருமகள் மற்றும் மலர் தொடர்களில் நடித்துள்ளார். மலர் சீரியல் முடிவடைந்த பின்னர், அடுத்த வாய்ப்புக்காக இவர் காத்திருந்த நிலையில் தான், 'மனசெல்லாம்' சீரியலில் நடிக்க தேர்வாகியுள்ளார்.
இதையும் படிங்க: Anna Serial: அண்ணனை அம்மாவாக நினைக்கும் தங்கைகள் - பஞ்சாயத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்!
இதற்கு முன் அருள் கதாபாத்திரத்தில் நடித்து வந்த, ஜெய் பாலா சில பர்சனல் காரணங்களுக்காக இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மனசெல்லாம் சீரியல் துவங்கியது முதல் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த இவரது வெளியேற்றம் ரசிகர்களும் வருத்தத்தை கொடுத்துள்ளது. எனினும் கூடிய விரைவில் வேறு தொடரில் இவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Karthigai Deepam: சிவனாண்டிக்கு தெரியவந்த உண்மை! சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி?