தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, ஜூலை 23ம் தேதியான இன்று தனது 50வது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார். சென்னையில் குடும்பத்துடன் கேக் வெட்டி, மகிழ்ச்சியைப் பகிர்ந்த சூர்யாவுக்கு, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவரது இளமை ததும்பும் தோற்றமும், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘சூர்யா 46’ படத்தின் போஸ்டரும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகின.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு பறந்த KISS.. திடீரென பாய்ந்து வந்த பொருள்.. ஸ்டைலாக கேட்ச் பிடித்த சூர்யா..!!
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 46வது திரைப்படமான 'சூர்யா 46' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர் நாக வம்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இப்படம், சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கடந்த ஜூன் 9ம் தேதி அன்று ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கிய இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

குடும்ப பொழுதுபோக்கு கதையாக உருவாகும் இப்படம், 2026 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் இளமையான தோற்றம் படத்தின் போஸ்டரில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியான இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சூர்யாவின் முந்தைய படமான 'ரெட்ரோ' பெரும் வெற்றி பெற்ற நிலையில், 'சூர்யா 46' படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இதையும் படிங்க: கருப்பன் வரான் வழி மறிக்காதே.. மாஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி..!