தமிழ் சினிமாவில் எப்படியும் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி கொண்டிக்கும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் அதுல்யா ரவி.

கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம், ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

இதையும் படிங்க: அழகில் தேவலோக ரம்பைக்கே டஃப் கொடுக்கும் த்ரிஷா! பார்த்ததுமே பிளாட் ஆன ரசிகர்கள்!
அந்த வகையில் கதாநாயகன், ஏமாளி, நாடோடிகள் 2, முருங்கக்காய் சிப்ஸ் போன்ற 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி ஹிட் அடிக்கவில்லை.

தெலுங்கிலும் அறிமுகமாகி உள்ள அதுல்யா, கடைசியாக 2023-ஆம் ஆண்டு மீட்டர் என்கிற படத்தில் நடித்தார். தற்போது, சிட்டி கேங் ஸ்டார், மற்றும் டீசல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

திரைப்பட வாய்ப்புகளை கை பற்றுவதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது பிங்க் நிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ரம்யா பாண்டியன் ஸ்டைலை பின் பற்றும் விதத்தில், சேலையை முறுக்கி... தூக்கலான கிளாமரில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

அதுல்யாவின் இந்த லேட்டஸ்ட் ஹாட் புகைப்படத்திற்கு வாணி போஜன் உட்பட 1 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படம்..! வெளியான மாஸ் அப்டேட்..!