தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிக ஆண்டுகள் கோலிவுட் திரையுலகில் ஹீரோயினாக நடித்து கொண்டிருப்பவர் தான் த்ரிஷா.

சென்னையில் பிறந்து வளர்ந்த த்ரிஷா, கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்து கொண்டிருந்த நிலையில் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

இதையும் படிங்க: புடவை கலெக்ஷனில் திரிஷாவை மிஞ்ச ஆளே இல்லை..! கலக்கல் சேலையில் ஹாட் கிளிக்..!
இவர் சினிமாவில் வாய்ப்பு தேடிய காலங்களில், சிம்ரன் - பிரஷாந்த் நடிப்பில் வெளியான 'ஜோடி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே இவரது அறிமுக படமாகவும் அமைந்தது.

இதை தொடர்ந்து, மௌனம் பேசியதே, மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்களில் நடித்து, ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக மாறினார்.

இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள த்ரிஷா, தமிழை தவிர தெலுங்கு மொழியிலும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

42 வயது வரை, முன்னாடி நடிகையாக இருக்கும் த்ரிஷா நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் த்ரிஷா, சமீபத்தில் நடந்த தக் லைஃப் படத்தின் ஆடியோ லாஞ்சில் நீல நிலா உடையில் தேவலோக ரம்பை போன்ற அழகில் தோன்றினார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நடுராத்திரி 3 மணி..! திரிஷா செய்த தரமான சம்பவம்.. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்..!