நடிகை திவ்யபாரதி ட்ரெண்டிங்கான ஜாக்கெட் அணிந்து, சேலை அழகில் ரசிகர்களை வசியப்படுத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் அடுத்தடுத்து, சினிமாவில் ஹீரோயினாக கால் பதித்து கலக்கி வருகிறார்கள்.

அந்த வகையில், கோயம்புத்தூரில் பிறந்து, பின்னர் மாடலிங் துறையில் கால் பதித்து பின்னர் நடிகையாக மாறியவர் தான், திவ்யபாரதி.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ட்வீட்.. டெலிட் செய்து எஸ்கேப் ஆன ஏ.ஆர்.ரகுமான்..!
2017-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'முப்பரிமாணம்' படத்தில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடித்த திவ்யபாரதி பின்னர், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பேச்சிலர் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

இவரது நடிப்பு, மற்றும் முதல் படத்திலேயே கொஞ்சம் ஓவர் கிளாமரை அவிழ்ந்து விட்டு இளம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறினார்.

'மகாராஜா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக 2 நிமிடம் மட்டுமே வரும் சிறப்பு தோற்றத்தில் நடித்த திவ்யபாரதி, ஜிவி பிரகாஷின் 25-ஆவது படமான கிங்ஸ்டன் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது 'மதில்மேல் பூனை' படத்தில் நடித்து முடித்துள்ளார். கூடிய விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

தனித்துவமான உடல் வாகு கொண்ட இவரை... ரசிகர்கள் ஃபோண்டா பாட்டில் அழகி என அழைக்கும் நிலையில், தற்போது இவர் தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ற போல் ஜாக்கெட்டில் கை இல்லாமல் சேலை அழகில் சொக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கர்ப்பமாக இருக்கிறார் நாக சைதன்யாவின் மனைவி..! சோபிதா ரசிகர்கள் ராக்..! சமந்தா ரசிகர்கள் ஷாக்..!