தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர் பட்டியலில் முதலில் இருப்பவர் நடிகர் தனுஷ் தான். இவர் தற்போது நடிப்பிலும் இயக்கத்தலும் மிகவும் பிஸியாக இருக்கிறார். இப்படி இருக்க, அசுரன், வேலைக்காரன், திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களை தேர்வு செய்த அவர், சமீபத்தில் குபேரா என்ற படத்தின் மூலம் திரையில் மீண்டும் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். என்ன தான் அவர் நடிகராக இருந்தாலும் இயக்குநர் ஆவதில் தான் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் அவதாரத்தில் அவர் இயக்கியுள்ள படம் தான் 'இட்லி கடை'.
இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பாலிவுட்டிலும் தனுஷின் வாய்ப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. தற்போது அவர் 'தேரே இஷ்க் மேயின்' என்ற ஹிந்தி திரைப்படத்தினை தனது கைவசம் வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இப்படத்தின் மூலம் அவர் தேசிய அளவில் தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தி இருகிறார். சமீப நாட்களில் தமிழ் திரையுலகில் இரண்டு முக்கிய நடிகர்களாக பார்க்கப்படும் ரஜினிகாந்த் மற்றும் விஜய், தங்கள் ரசிகர்களை நேரில் சந்தித்து, புகைப்படம் எடுத்து, உரையாடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருவது வழக்கமாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இப்போது தனுஷும் அந்த வழியை பின்பற்ற தொடங்கியுள்ளாராம். ரசிகர்கள் பல ஆண்டுகளாக தனுஷை நேரில் சந்திக்க ஏங்கியதை கருத்தில் கொண்டு, அவரும் தற்போது அதற்கான அரங்கேற்ற திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒரு பிரமாண்ட ஸ்டூடியோவில், 25 வாரங்களுக்கு முன்னதாகவே இடம் முன்பதிவு செய்து வைத்துள்ளார். இதன் அடிப்படையில், வரும் ஜூலை 27 முதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், 500 பேர் வீதம் ரசிகர்களை நேரில் சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களோடு உரையாடும் திட்டத்தை அவர் தொடங்க உள்ளாராம். இந்த திட்டம், ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது, தனுஷின் ரசிகர்களிடையே அவரின் நேரடி உறவை வலுப்படுத்தும் புதிய முயற்சி என்றும், அவரின் புதிய பிம்பத்தை வலுப்படுத்தும் பிஆர் யுக்தி என்றும் கூறப்படுகிறது. தனுஷ், இத்திட்டத்திற்காக தனி டீம் ஒன்றை அமைத்து, பூரணமாக திட்டமிட்டு செயல்பட உள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு வாரமும் சந்திக்கப்படும் ரசிகர்கள், அழகான புகைப்படம் மற்றும் நினைவுப் பரிசு பெற்று வீட்டுக்கு திரும்பக்கூடிய வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதையும் படிங்க: கல்யாணமா.. எனக்கா.. நெவர்..! நடிகை சதாவுக்கு திருமணத்தை விட அதுலதான் இன்ட்ரஸ்ட்டாமா..!
இதற்குண்டான ஆரம்பமாக நிகழ்வு ஜூலை 20 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தனுஷுக்கு ஏற்பட்ட லேசான உடல்ரீதியான பிரச்சனை காரணமாக, அவர் முதல் வார சந்திப்பில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், தனுஷின் இந்த மக்கள் சந்திப்பு முயற்சி, அவரது அரசியல் பரிசோதனையின் முதல் படியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதே போன்று கடந்த காலங்களில் ரஜினிகாந்தும் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசினார். அதேபோல், விஜய்யும் தொடர்ந்து ரசிகர் விழாக்களில், தற்காலிக அரசியல் கருத்துக்களை பரிமாறி வந்துள்ளார். அவர்கள் வரிசையில் தனுஷ், இப்போது அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி, ஒரு புதிய மக்கள் அடையாளத்தையும் கட்டமைக்க முயற்சி செய்கிறார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், “தனுஷ் அரசியலுக்கு வருவாரா?” என்ற கேள்வி, தற்போது மீண்டும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. இந்த நிலையில், அவரது பிரபலத்தையும், பொதுமக்கள் ஆதரவையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் ஒரு அரசியல் பிரச்சாரம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகிவருகிறது. மேலும், விஜயின் ‘தமிழர் வழி’, ரஜினியின் ‘மக்கள் சேவை’, எனும் முறைகளை கண்டு தனுஷும் தனக்கென ஒரு வழியைக் கட்டமைப்பாரா? என்பது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த யோசனையை உருவாக்கி உள்ளது.

மொத்தத்தில், இது ஒரு சாதாரண ரசிகர் சந்திப்பு நிகழ்வாக மட்டும் இல்லாமல், அரசியல் அடையாளத்திற்கான முதல் அடியை வைத்திருக்கக்கூடியது என்கிறது பலர் கருத்து. தனுஷ் விரைவில் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு, தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய கட்டத்துக்கு வழிவிடும் வாய்ப்பு உள்ளதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: தினமும் புதுசு புதுசா பரோட்டா செய்து கொடுத்த விஜய் சேதுபதி..! முகம் சிவக்க நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பேச்சு..!