தமிழ் சினிமாவில் அதிகப்படியான ஆக்ஷன் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் குடும்ப ஆடியன்ஸ்கள் தியேட்டருக்கு செல்வதை முற்றிலுமாக குறைத்துள்ளனர். அதனால் மீண்டும் தமிழ் சினிமா குடும்பம், பாசம், சமுதாய நிகழ்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் இதுபோன்ற படங்களை மட்டுமே தொடர்ந்து இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருபவர் தான் இயக்குநர் பாண்டிராஜ். இவர் இதுவரை பசங்க, வம்சம், மெரினா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் போன்ற குடும்ப திரைப்படங்களை இயக்கி பெற்ற வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர் இயக்கியுள்ள புதிய படம் தான் ‘தலைவன் தலைவி’. இந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் 52வது திரைப்படம் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த படம் அவரது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதோடு, குடும்ப உணர்வுகளின் மீதான அவரது முன்னணி காட்சிகளின் அடிப்படையில் மீண்டும் திரைக்கு வருவதை உறுதி செய்கிறது. இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அவருடைய ஆழமான நடிப்பு, உணர்ச்சியின் வெளிப்பாடுகள் மற்றும் கதாபாத்திர வெளிப்பாடு என படத்தின் அனைத்து காட்சிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தில் இசையமைத்துள்ள சந்தோஷ் நாராயணன், படத்தின் உணர்வுப் பரிமாணங்களை மெருகூட்டும் வகையில் இசைகளை அமைத்துள்ளார். தற்போது வரை வெளியான பாடல்கள், இசைப் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. டிரெய்லர் மற்றும் ப்ரோமோவிலும் சந்தோஷ் நாராயணனின் பிஜிஎம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ், கடந்த சில ஆண்டுகளில் தரமான குடும்ப திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம். அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தலைவன் தலைவி திரைப்படம், ஜூலை 25அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A சான்றிதழை வழங்கியுள்ளது. இது குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படம் என்பதைக் காட்டுகிறது. பண்டிராஜ் படங்களின் சின்னச்சின்ன நகைச்சுவை, அடங்கிய அமைதியான காட்சி மற்றும் உணர்ச்சி சார்ந்த கதைகள் இதிலும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான டிரெய்லர், ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டிரெய்லரில், கணவன் மற்றும் மனைவி இடையிலான காதல், புரிதல், பிரிவு, சண்டை, மீண்டும் இணைவது போன்ற உணர்ச்சி சார்ந்த தருணங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பு மற்றும் நித்யா மேனனின் கூர்மையான பார்வை படத்தின் கதையை ப்ரோமோவிலேயே நன்கு எடுத்துக்காட்டுகின்றன.
இதையும் படிங்க: A RUGGED LOVE STORY.. மாஸாக வெளியானது 'தலைவன் தலைவி' ட்ரெய்லர்..!
இந்த சூழலில், சமீபத்தில் நடிகை நித்யா மேனன் கலந்து கொண்ட நேர்காணலில், விஜய் சேதுபதியைப் பற்றி பேசும்போது சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் பேசுகையில், "விஜய் சேதுபதி, ஒவ்வொரு நாளும் வேறுவிதமான பரோட்டாக்களை செய்து கொடுப்பார். அவர் செய்த சாக்லேட் பரோட்டா, பைன்அப்பிள் பரோட்டா, வாட்டர்மெலன் பரோட்டா என எல்லாம் வித்தியாசமான கம்பினேஷன்கள். மேலும், அவர் செய்த ஆம்லேட் அட்டகாசமாக இருக்கும்” என நித்யா மேனன் உற்சாகமாக கூறியுள்ளார். இப்படி இருக்க, ‘தலைவன் தலைவி’ திரைப்படம், காதலும், குழப்பமும், புரிதலும் கலந்த முழுமையான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜின் தனித்துவமான அணுகுமுறை, விஜய் சேதுபதி – நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பு, சந்தோஷ் நாராயணனின் இசை, சத்யஜோதி பிலிம்ஸ் வழங்கும் தரமான தயாரிப்பு என பல அம்சங்கள் இப்படத்தை ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் திரைப்படமாக மாற்றுகின்றன.

ஆகவே, ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம், வாழ்க்கையின் அவசரமான முடிவுகள் மற்றும் மீண்டும் தொடங்கும் அன்பு பயணம் ஆகியவற்றை சொல்லும் ஒரு தனித்துவமான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணியில் ‘தலைவன் தலைவி’..! தெலுங்கில் படத்தின் பெயர் என்ன தெரியுமா..?