தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளம் அமைத்துக் கொண்டவர் நடிகர் கிங்காங். தனது நகைச்சுவை நடிப்பால் மட்டும் சிறு சிறு சப்போர்டிங் ரோல்களிலும் முத்திரை பதித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ‘கிங்காங்’. இந்த பெயர் அவரது அறிமுக படத்தின் கதாபாத்திரமாக இருந்தாலும், அதுவே அவரது பெயராக மாறியது என்பது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த விசயம். நடிகர் கிங்காங், கலா என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது, இவரது மூத்த மகளாகிய கீர்த்தனாவின் திருமணம் சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதையும் படிங்க: விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை.. ஆமாம்..எங்களுக்குள் சண்டை தான் – நடிகர் விஜய் சேதுபதி பளிச் பேச்சு..!
இந்த திருமண விழாவிற்கு அரசியல், சினிமா மற்றும் சமூக வட்டாரத்திலிருந்து ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதில் மிக முக்கியமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தியது பெரிய அற்புத நிகழ்வாக அமைந்தது. முதலமைச்சரின் வருகையை எதிர்பாராத கிங்காங் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது. அவர் மட்டுமின்றி, விழாவில் கலந்து கொண்டிருந்த அனைத்து விருந்தினர்களும் இதனை மிகுந்த ஆச்சரியத்துடன் பாராட்டினர். இந்த சூழலில் திருமண நிகழ்வுக்குப் பிறகு, தனியாக நடிகர் சிவகார்த்திகேயன், கிங்காங் அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று மணமக்கள் கீர்த்தனா மற்றும் அவரது வாழ்க்கை துணையை சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து கிங்காங் கூறும்போது, " சிவகார்த்திகேயன் மிக நல்ல மனிதர். எங்களுடன் பல படங்களில் பணியாற்றியவர். நேரத்தில் வர முடியாமல் போனதால் தனியாக வந்து வாழ்த்தினார். இது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி" என்றார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கே கிங்காங், அவரது மகள் மற்றும் மருமகன் சென்றுள்ளனர். அங்கு, விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து மணமக்களை வாழ்த்தி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பின் வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகர் கிங்காங் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
👉🏻 actor vijay sethupathi with king kong family - video - click here 👈🏻
அந்தக் காணொளியில், எல்லோரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டும், சிரிப்பை பரிமாறிக் கொண்டும் இருப்பது காணப்படும். ரசிகர்களும், ஜோடிகளை மனதார பாராட்டி வருகின்றனர். இது போன்ற குடும்ப நிகழ்வுகளில் சினிமா உலகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்துவது, அந்த நடிகரின் சினிமா பயணத்திற்கும் அவருடைய நற்குணங்களுக்கும் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. கிங்காங், தன்னை யாராக இருந்தாலும் அடக்கமாக நடத்தும் நடிகராகவும், அனைவரிடமும் நட்பாக பழகும் குணாதிசயத்திற்கும் பெயர்போனவராகவே அறியப்படுகிறார். அதனால் தான் அவருக்கு இந்த அளவிற்கு பலரும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. திருமணம் என்பது ஒருவர் குடும்ப வாழ்க்கையின் புதிய தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. இதில் நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமணம், இதயங்களை கவர்ந்த தருணமாக மக்கள் மனதில் பதிந்து விட்டது. முதலமைச்சர் முதல் முன்னணி நடிகர்கள் வரையிலான பிரமுகர்கள் நேரில் வாழ்த்தியிருப்பது, இந்த நிகழ்வை சிறப்பாக மாற்றியுள்ளது.

ரசிகர்கள் இதற்கான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து “வாழ்க வளமுடன்”, “கிங்காங் சார் உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கு..! அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா ஆஜர்..!