தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிப்பாற்றலுடன், கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கும் நடிகராக திகழ்கிறார் விஜய் சேதுபதி. தனது பயணத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஆரம்பித்து, “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக வளர்ந்தவர். இன்று தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து பன்முகத்தன்மை கொண்ட நடிகராக அனைவரையும் கவர்ந்து வருகிறார். இப்படி இருக்க சமீபத்தில் அவர் தனியார் சேனலுக்கு அளித்த ஒரு நேர்காணல் ரசிகர்கள் மற்றும் திரை உலகினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
அந்த நேர்காணலில், தனது நடிப்பு வாழ்க்கை, விமர்சனங்களை நோக்கும் பார்வை, இயக்குநர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள், வெற்றியைக் காணும் தன்னுடைய விதம் ஆகியவை பற்றி மிக நேர்மையாகவும், நேரடியாகவும் கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதன்படி விஜய் சேதுபதியிடம், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்ததைக் குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் கூலாக பதிலளித்தார்.

அவர் பேசுகையில், "விமர்சனங்கள் என்னை காயப்படுத்தியது கிடையாது. நாம் என்ன செய்தாலும் விமர்சிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். அதை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது. இதை ஒரு நடிகனாக இல்லாமல், ஒரு சாதாரண மனிதனாகத் தான் சொல்கிறேன். விமர்சனங்களை நான் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் தேவையான இடங்களில் விளக்கம் கொடுத்துள்ளேன். அதோடு இயக்குநர் பாண்டிராஜ் உடன் சண்டை எதனால் என்றால் எல்லாமே வேலைக்காகத்தான். எங்களுக்குள் சில முட்டல் மோதல்கள் வந்தது உண்மைதான். ஆனால் இப்போது அதெல்லாம் சரியாகி விட்டது. இது சினிமாவில் சகஜம் தான். பெரிய விஷயமே கிடையாது. மேலும் வெற்றியை தேடாமல், வேலையை ரசித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏனெனில் வெற்றி நமது சிந்தனையில் இருந்தால் பாரம் வந்துவிடும்.
இதையும் படிங்க: ஆபாச காட்சிகளில் நடித்து இருக்கும் பிரபல நடிகை..! ஸ்வேதா மேனன் மீது அதிரடியாக வழக்கு பதிவு...!
ஆனால் வேலையை ரசித்து செய்யும் போது அனைத்தும் தேடி வரும். ஆகவே விமர்சனங்கள் அனைத்தையும் தாண்டித் தான் வரவேண்டும். தவறு என்றால் திருத்திக் கொள்ள வேண்டும். அவன் வாழ்க்கையை அவன் வாழ்ந்து கொள்வான்" என்று கூறிய விஜய் சேதுபதி, ஒரு சுயநலம் அல்லாத, நடிப்பாளரின் குரலை வெளிப்படுத்தினார். மொத்தத்தில் விஜய் சேதுபதியின் இந்த நேர்காணல், ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளதோடு, ஒரு தனித்துவமான கலைஞரின் உள்ளக் குரலை வெளிப்படுத்தி இருக்கிறது. விமர்சனங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் மனம், வேலை மீது வைத்துள்ள அன்பு, தவறுகளை ஏற்று திருத்தும் திறமை என இவை அனைத்தும் அவரை ஒரு நடிகனாகவும், மனிதனாகவும் உயர்த்தும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

எனவே திரையுலகில் மாறாத சுயபாணி கொண்டு, திறமை, ஒழுக்கம், நம்பிக்கை மூன்றையும் நிலைநாட்டி வருகிற நடிகர் விஜய் சேதுபதியின் இந்தப் பேட்டி, இன்னும் பலர் அவரை புரிந்து கொள்ளும் விதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதையும் படிங்க: நடிகை ரம்யா மீது அவதூறு விமர்சனங்கள்..! சைபர் கிரைம் போலீசாரின் நடவடிக்கையால் 5 பேர் கைது..!