தமிழ் சினிமாவில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமானவர் தான் நடிகர் பாலா. இயக்குநர் சிவாவினுடன் பிறந்த சகோதரரான இவரது வாழ்க்கை, திரையுலகத்தைவிட, தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களில் தான் அதிகமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் தோன்றி ஃபேமஸாக இருக்கிறார். இவர் தனது முதலாவது காதல் திருமணத்திலிருந்து தொடங்கி, இரண்டாவது திருமணம், பின்னர் டாக்டர் எலிசபெத்தை மூன்றாவதாக திருமணம் செய்து, அதிலும் விவாகரத்து பெற்று, இப்போது நான்காவதாக தனது உறவுக்கார பெண்ணான கோகிலாவை திருமணம் செய்தது வரை பாலா தனது வாழ்க்கையில் தொடர்ச்சியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
அதேசமயம், பாலா மற்றும் அவரது முன்னாள் மனைவியான டாக்டர் எலிசபெத் இடையே நடந்த வார்த்தைச் சண்டைகளும், குற்றச்சாட்டுகளும், சட்ட நடவடிக்கைகளும் சமூக வலைதளங்களில் பலரினுடைய கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், டாக்டர் எலிசபெத், "நடிகர் பாலா தன்னை மிரட்டுகிறார், குடும்ப வாழ்க்கையின் போது அடித்து உதைத்து துன்புறுத்தினார்" என பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக காவல் நிலையத்தில் புகாராக அளித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்திலும் தொடர்ந்து கொண்டே இருந்தது.இந்த நிலையில் தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் டாக்டர் எலிசபெத் வெளியிட்ட வீடியோ தற்பொழுது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பேசிய எலிசபெத், " நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டது, கேரள முதல்வரிடம் முறையிடும் செஞ்சாச்சு ஆனாலும் என் பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. நடிகர் பாலா தொடர்ந்து எனக்கு விரோதமாக பல தாக்குதல்களை செய்து வருகிறார். என்னை குறித்து தேவையில்லாமல் அவதூறுகளை பரப்புகிறார். போலீசாரிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும், வழக்குகள் தொடர்ந்தும் என்னால் இதுவரை நீதியை காண முடியவில்லை. நீதிமன்றத்தில் அவர் இதுவரைக்கும் ஆஜராகவே இல்லை. கடந்த முறை வந்த போது, அவருடைய வழக்கறிஞர், ‘பாலா பொருளாதார ரீதியாக மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளார்’ என்று கூறினார். இதே பாலா தான் சில மாதங்களுக்கு முன் ‘தனக்கு 250 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன’ என ஒப்புக்கொண்டார். இப்படி இருக்க, பெண்கள் தங்கள் குரலை உயர்த்தினால் நீதி கிடைக்கும் என்று பலர் சொல்கிறார்கள். அதைப் பற்றி நம்பிக்கையுடன் முன்னேறினேன். ஆனால் இப்போது உண்மை என்ன என்பதை உணர்ந்துள்ளேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இதற்கு பின்பாக என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது. அதற்கான முடிவுகளும் எனக்குத் தெரியாது.
இதையும் படிங்க: மும்பை மோசடி வழக்கு: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு பறந்த சம்மன்..!
ஒருவேளை எனக்கு ஏதாவது நடந்தால் என் உயிரே போனாலும், அதற்கு முழுப் பொறுப்பும் நடிகர் பாலா மற்றும் அவருடைய குடும்பமே" என கூறியுள்ளார்.அவரது இந்த வீடியோ பல தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை வீடியோ வெளியிட்டு தற்கொலை முயற்சி செய்திருப்பாரோ என்ற சந்தேகத்துடன் போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ மற்றும் அதில் வெளியிடப்பட்ட வாக்குமூலங்கள், சினிமா உலகத்தை மட்டுமல்லாது, சட்ட மற்றும் மனித உரிமை கோணத்திலும் பல்வேறு கேள்விகளை தற்பொழுது எழுப்பி இருக்கின்றன. நடிகர் பாலா இதுவரை இந்த கானொலிக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் விவாதங்கள் மட்டும் தீவிரமடைந்து வருகின்றன. சிலர் டாக்டர் எலிசபெத்தின் வீடியோவிற்கு ஆதரவாக குரல் கொடுக்க, இன்னொருபக்கம் பாலாவுக்கு ஆதரவாகவும் குரல் எழுந்துள்ளன. இந்த சூழலில், தற்போது கோழிக்கோடில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சட்டப்படி விசாரணைகள் நடைபெற்று, உண்மை என்ன என்பது அதிகாரபூர்வமாக வெளியே வரும் வரை, அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, நடிகர் பாலா மற்றும் டாக்டர் எலிசபெத் இடையே நடைபெற்று வரும் இந்த நீண்ட கால பிரச்சனையை நீதிமன்றம் தலையிட்டு உடனே முடிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பும், பிரபலங்களின் சமூக பொறுப்பும் இன்னும் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய தருணமாக டாக்டர் எலிசபெத் பிரச்சனை பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இங்கு குற்றங்கள் அதிகம் ஆனால் நீதிமன்றம் குறைவு..! பருத்திவீரன் சரவணனின் ஆதங்க குரல் இணையத்தில் வைரல்..!