தென்னிந்திய திரையுலகில் தற்போது வேகமாக கவனம் பெற்று வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பாக்யஸ்ரீ போர்ஸ்.

மாடலிங் உலகில் இருந்து திரைப்பட துறைக்கு வந்த இவர், குறுகிய காலத்திலேயே தனது நடிப்பு திறமை மற்றும் திரை தோற்றத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தனது பயணத்தை விரிவுபடுத்தி வரும் பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது தமிழ் திரையுலகில் முக்கியமான படங்களில் நடித்து வருவதால் அதிக கவனம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: சிவப்பு உடையில்.. லைட்டான கவர்ச்சியில் மின்னும் லுக்..!! நடிகை சம்யுக்தாவின் புதிய போட்டோஸ் வைரல்..!

இந்த நிலையில், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

இன்ஸ்டாகிராமில் மட்டுமே இவருக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்கள் உள்ள நிலையில், அவரது ஒவ்வொரு பதிவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவது வழக்கமாகியுள்ளது.

பாக்யஸ்ரீ போர்ஸ் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களில் அவர் மிகவும் ஸ்டைலிஷ் மற்றும் நவீன ஃபேஷன் லுக்கில் தோன்றியுள்ளார்.
இதையும் படிங்க: இனி.. நான் போற பாதை சிங்கப்பாதை..!! சூசமாக அரசியல் என்ட்ரியை அறிவித்த விஷால்.. விமர்சிக்கும் ரசிகர்கள்..!