சின்னத்திரையில் அறிமுகமாகி, இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உயர்ந்தவர்களில் முக்கியமானவர் மௌனி ராய்.

குறிப்பாக, நாகினி சீரியல் மூலம் இந்தியா முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மௌனி ராய், அதன்பிறகு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து தனது திரைப்பயணத்தையும் விரிவுபடுத்தினார்.

நடிப்பு மட்டுமின்றி, நடனம், மியூசிக் ஆல்பங்கள், சிறப்பு பாடல்கள் மற்றும் மாடலிங் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: நானி படத்தை சுற்றி வெடித்த புதிய சர்ச்சை..!! டாக்ஸிக்குக்கு பிறகு தி பாரடைஸுக்கும் கோர்ட் அதிரடி உத்தரவு..ஷாக்கில் இளசுகள்.!

மௌனி ராயை பொறுத்தவரை, அவருடைய நடிப்புக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு அவரது போட்டோஷூட்களுக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

அவ்வப்போது விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அவர் வெளியிடும் ஒவ்வொரு புதிய புகைப்படத் தொகுப்பும் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது மௌனி ராய் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்த முறை மிகவும் எளிமையான அதே நேரத்தில் கவர்ச்சிகரமான தோற்றத்தில் கருப்பு நிற புடவை அணிந்து அவர் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

பொதுவாகவே புடவை அணியும் போது மௌனி ராயின் தோற்றம் ரசிகர்களை கவரும். ஆனால், இந்த போட்டோஷூட்டில் அவர் தேர்வு செய்திருக்கும் கருப்பு நிற புடவை மற்றும் அதற்கேற்ற அணிகலன்கள் அவரது தோற்றத்திற்கு கூடுதல் அழகை கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.100 கோடி வசூல்.. பிஸியிலும் இப்படியா..!! சூரியை நேரில் பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் இரா.சரவணன்.. வைரலாகும் பதிவு..!