தமிழ் சினிமாவில் நட்சத்திர வாரிசாக அறிமுகமானாலும், காலப்போக்கில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ருதிஹாசன்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் திரையுலகிற்குள் வந்த இவர், நடிப்பு மட்டுமின்றி பாடகி, இசைக்கலைஞர் என பல்வேறு தளங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு தென்னிந்தியா முழுவதும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இதையும் படிங்க: ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்..!! சின்னத்திரை நடிகைகள் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் வைரல்..!

திரைப்படங்களை தாண்டி சமூக வலைதளங்களிலும் ஸ்ருதிஹாசன் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

குறிப்பாக தனது வித்தியாசமான ஃபேஷன் தேர்வுகள், போட்டோஷூட் புகைப்படங்கள், இசை தொடர்பான பதிவுகள் என தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மற்ற நடிகைகள் அடிக்கடி விதவிதமான வண்ணங்களில் ஆடைகளை தேர்வு செய்யும் நிலையில், ஸ்ருதிஹாசனின் ஃபேஷன் உலகில் கருப்பு நிறத்திற்கு எப்போதுமே ஒரு தனி இடம் இருப்பதை ரசிகர்கள் பல ஆண்டுகளாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் ஸ்ருதிஹாசன் நடத்தியுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதையும் படிங்க: தாடியை எப்போது எடுப்பேன் என தெரியவில்லை..!! ‘பென்ஸ்’ படத்தால் நொந்து போன நிவின் பாலி..!