ஆரம்பத்தில், 2005 ஆம் வருடம் இந்தியில் வெளியான "இல் சந்த் சா ரோஷன் செஹ்ரா" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதே ஆண்டு "ஸ்ரீ" என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு "கேடி" என்ற தமிழ் படத்தில் தமிழில் அறிமுகமானார் தமன்னா பாட்டியா.
இதையும் படிங்க: கருப்பு நிற உடையில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ரம்யா பாண்டியன்..!

இதனை தொடர்ந்து, சிறுத்தை, பையா, சுறா, படிக்காதவன், தில்லாலங்கடி, தோழா போன்ற படங்களில் நடித்து தனது பெயரை மக்கள் மனதில் பதிய வைத்தார்.

இப்படி, பாலிவுட் மற்றும் கோலிவுட் மார்க்கெட்டில் தமன்னா பெயர் ஒலிக்காத நாளே இல்லை. அந்த அளவுக்கு தமன்னா கால் ஷீட் கொடுக்க கூட நேரமில்லாமல் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அளவிற்கு மாறி இருக்கிறார்.

சிறிது காலம் தமிழ் சினிமாவில் காணாமல் போன தமன்னா திடீரென ஜெயிலரில் "காவாலையா" பாடலில் நடனம் ஆடி மீண்டும் ட்ரெண்ட் ஆனார்.

இதுவரை ஹீரோக்களுடன் காதல் காட்சிகளில் மட்டுமே நடித்த தமன்னா, முதல் முறையாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக அரண்மனை 4ல் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல், இதுவரை முத்த காட்சிகள் மற்றும் மிகுந்த ரொமன்ஸ் காட்சிகளில் நடிக்காத தமன்னா,"ஜீ கர்டா" என்ற ஓடிடி தொடரில் குறைந்த அளவிலான ஆபாச காட்சிகளில் நடித்து இருந்தார்.

இதனால் ரசிகர்களின் வசை சொல்லுக்கு ஆளான தமன்னா, அடுத்தடுத்த படங்களின் கதாபாத்திர தேர்வினால் தனது ரசிகர்களை காத்து கொள்ள முடிவு செய்து, யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி, ஹெபா பட்டேல், வசிஷ்ட என். சிம்ஹா ஆகியோருடன் இணைந்து தமன்னா பாட்டியா "ஒடெலா 2" என்ற படத்தில் மிகவும் பயங்கரமான மந்திரவாதியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லரை பிப்ரவரி 22ம் தேதி கும்பமேளாவில் வைத்து வெளியிட்டனர் படக்குழுவினர். இவரது சிறந்த படங்களாக பார்த்தால், எனக்கு 20 உனக்கு 18, வியாபாரி, அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை,

படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, கோ, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, தேவி, கத்திச்சண்டை, தர்மதுரை, தோழா, பாகுபலி 2, கே ஜி எஃப் (சேப்டர் 1), ஸ்கெட்ச், சயீரா நரசிம்ம ரெட்டி, கண்ணே கலைமானே, ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ், தேவி 2, ஜெயிலர், அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆபாச வீடியோ மற்றும் ஆடியோவால் துணை நடிகையை வம்புக்கு இழுத்த காமுகன்..! அஸ்வினி தங்கராஜின் தரமான பதிலடி..!