தமிழ் சினிமாவில் பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவர் என்ற பெயரை உடைய நடிகை என்றால் அவர் தான் தான்யா ரவிச்சந்திரன். இவர் நடிப்பால் மட்டுமல்ல, தனது ஒழுக்கமான பண்புகளை வெளிக்காட்டும் வகையிலும் சிறந்த இளம் நடிகை என்ற பெயரை பெற்றவர். இப்படிப்பட்ட நடிகை தான்யா ரவிச்சந்திரன், புகழ்பெற்ற நடிகரும், இசையமைப்பாளருமான மறைந்த ரவிச்சந்திரனின் பேரபிள்ளை. அவரது தந்தை வினோத் ரவிச்சந்திரன், ஒரு தொழிலதிபர்.
இப்படி இருக்க, தனது கல்லூரி காலத்தில் இருந்தே நடிப்பில் அதிக ஆர்வம் கொண்ட தான்யா, சினிமாவில் 2016ம் ஆண்டு வெளியான "பலே வெள்ளையத்தேவா" என்ற படம் மூலம் அறிமுகமானார். சும்மா சொல்லக்கூடாது இப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் குடும்பக் கதைகளில் நடிக்கும் வாய்ப்பை அதிகம் பெற்றார். அதன்பிறகு பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், ரசவாதி உள்ளிட்ட படங்களில் நடித்த தான்யா, சில தெலுங்கு திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இத்தனைக்கும் இடையே, எப்போதும் பெரிதளவில் கிளாமர் இல்லாமல் குடும்பத் தோற்றம், எளிமையான நடிப்பு, நேர்த்தியான பாவனை என அனைத்திலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.

குறிப்பாக, கடந்த இரு ஆண்டுகளில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கிளாமர் மற்றும் பயண புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களிடம் தன்னை ஒரு புதிய பரிமாணத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த சூழலில், இவர் தற்போது தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துள்ளார் என்ற இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. அதற்கு ஆதாரமாக நடிகை தான்யா தனது நிச்சயதார்த்தம் பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில் தனது வருங்கால காதல் கணவருடன் எடுத்துக் கொண்ட Lip-lock புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனின் 'மநீம-வில்' இணைந்தாரா ரஜினி காந்த்..? புகைப்படத்தால் கலக்கத்தில் ரசிகர்கள்..!
இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.அவரது பதிவில் "அவர் கேட்டார்... நான் “ஆம்” என்று சொன்னேன்! என் முழு மனதுடன், என் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை அவருடன் தொடங்குகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். நடிகை தான்யாவின் வருங்கால கணவர், ஒளிப்பதிவாளராகவும், தொழில்நுட்ப கலைஞராகவும் செயல்பட்டு வரு கவுதம். இவர் தற்போது உருவாகி வரும் “பென்ஸ்” என்ற திரைப்படத்தின் சினிமாடோகிராஃபராக பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களுக்குள் நட்பாகத் தொடங்கிய உறவு, காதலாக மாறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கினறன. இந்த நிலையில், தான்யா மற்றும் கவுதம் ஜோடிக்கு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள், நெட்டிசன்கள் என அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது இருவரின் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், விரைவில் திருமண தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நடிகை தான்யா ரவிச்சந்திரன், தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தை மிக எளிமையாகவும், அழகாகவும் கடந்திருக்கிறார்.
இதையும் படிங்க: தெலுங்கு திரையுலகில் தொடரும் இரங்கல்கள் செய்தி...! நடிகர் ரவி தேஜாவின் தந்தை ராஜகோபால் ராஜு காலமானார்..!