தமிழ் சினிமாவில் பலரது கவனத்தையும் அதிகம் இழுத்து இன்று நம்பிக்கை நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர்கள் என்றால் அவர்கள் தான் ரஜினிகாந்தும் கமல் ஹாசனும். இவர்கள் இருவரும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் நட்பின் அடையாளமாகவும் திகழ்கின்றனர். இப்படிப்பட்ட, கமல் மற்றும் ரஜினியின் நட்பு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. 1970களில் ஒரு மேடை நாடகக் குழுவில் ஆரம்பித்த இவர்களின் உறவு, பின்பு சினிமாவில் இணைந்து நடித்த பலதரப்பட்ட தருணங்களால் வலிமையடைந்தது.
குறிப்பாக " 16 வயதினிலே, அவளின் ஆசை, நினைத்தாலே இன்னிக்கும், நீயா போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படி பட்டவர்களுக்கு போட்டி உணர்வுகள் தான் அதிகம் இருக்க வேண்டும். மாறாக, போட்டி உணர்வை விட, ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கும் கலாச்சாரம் தான் இவர்களை தனிப்பட்ட முறையில் இன்றும் மக்கள் மத்தியில் உயர்த்தி வைத்தது. சில ஆண்டுகளுக்கு முன், கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை குறித்து அறிவித்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்த ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். "நம் நண்பர் கமல், சினிமாவில் இருப்பது போல அரசியலிலும் சிறந்து விளங்கட்டும்" என்ற கருத்தையும் அவர் தான் முதலில் பதிவிட்டிருந்தார்.

காரணம், கடந்த பத்தாண்டுகளில் திரையுலகத்தில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள் பலர் இருந்தாலும், அவர்களுக்கான வாய்ப்பு அதிகம் கிடைக்காமல் இருந்தது. ஆனால் கமலுக்கு, தனது தனிப்பட்ட அடையாளம், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் மக்கள் தொடர்புகள் அதிகம் இருக்கும் காரணத்தால் அவருக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இது மற்ற திரையுலக பிரபலர்களுக்கும் ஒரு புதிய தன்னம்பிக்கையை உருவாக்கியது என்றால் மிகையாகாது. இப்படி இருக்க, கமல் ஹாசன், நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் பேசுவார், மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் தற்பொழுது மக்களுக்கு எழுந்துள்ளது. ஏற்கனவே, 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு, சமூக மாற்றங்களை முன்னிறுத்தும் வகையில் பல திட்டங்களை கமல் தனது கட்சி வாயிலாக செய்து வந்தது உண்மைதான்.
இதையும் படிங்க: பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் "கூலி"..! புது தளபதி-யை காண தயாரா.. நெகிழ்ச்சியில் ரஜினி..!
இப்படி, பலமுறை தேசிய விருதுகளை வென்றவர், நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிய கமல் ஹாசன், 2018-ம் ஆண்டு தனது அரசியல் கட்சியான "மக்கல் நீதி மையம்" என்ற புதிய கட்சியை தொடங்னார். பின் 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், அதில் அவர் வெற்றிபெற முடியவில்லை. அதன்பிறகு, அவர் திமுகவுடன் கூட்டணி அமைத்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கமலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, திரையுலக பிரபலங்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கமலின் இந்த புதிய அரசியல் பயணத்திற்கு தங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், திமுக தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோரும் தனிப்பட்ட முறையில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இப்படி அனைவரும் வாழ்த்து சொன்னாலும் இந்த வாழ்த்துக்களில் மிகவும் தனித்துவமான நிகழ்வாக அமைந்து உள்ளது ரஜினிகாந்த் கமலை சந்தித்த நிகழ்வு. நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான அறிவிப்பு வந்த பிறகு, ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற கமல், தனது மகிழ்ச்சியை தனது நெருங்கிய நண்பனுடன் பகிர்ந்துகொண்டார். இருவரும் நெருக்கமாகப் பேசிக் கொண்டபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, கமல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "எனது புதிய அரசியல் பயணத்தை என் நீண்ட நாள் நண்பர் ரஜினியுடன் பகிர்ந்து கொண்டேன். அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், இருவரும் மகிழ்ச்சி பொங்க சிரிக்கின்றனர்.

ஒரு நண்பனின் வெற்றியை மற்றொரு நண்பன் நேரில் வாழ்த்தும் இந்த செயல், தமிழர் பாரம்பரியமான நட்பின் மதிப்பையும், மனித உறவுகளின் அழகை மேலும் வெளிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: அறிவாளிகள் பலர் இருக்கும்பொழுது என்ன ஏன் கூப்டீங்க?..! “வேள்பாரி” நூல் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் நகைச்சுவை பேச்சு..!